மேற்கு வங்கத்துக்கான சட்டப்பேரவைத் தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையேதான் போட்டி என்று பாஜக தலைவர் சமிக் பட்டாச்சார்யா தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 23 ஆம் தேதி முடிவடைந்த நிலையில், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 29 ஆம் தேதி நடைபெற உள்ளது. மேலும், இதற்கான வாக்கு எண்ணிக்கை வரும் மே. 4 ஆம் தேதி நடத்தப்பட உள்ளது. இதனால் மேற்கு வங்க தேர்தல் களம் மிகவும் பரபரப்பாகக் காணப்படுகிறது.
இதுகுறித்து பாஜக தலைவர் சமிக் பட்டாச்சார்யா தெரிவித்ததாவது:
“மே 4 ஆம் தேதி, ஆட்சியிலிருந்து மமதா பானர்ஜி அகற்றப்படுவார். மக்கள் தங்களுடைய முடிவை எடுத்துவிட்டனர். நீண்ட நாள்களுக்குப் பிறகு, அச்சமின்றி வாக்களிக்கலாம் என்று கூறி, மக்கள் எல்லா இடங்களிலும் வெளியே வருகிறார்கள்.
பவானிபூரில் போட்டியிடும் சுவேந்து அதிகாரி நிச்சயம் வெற்றி பெறுவார். மமதாவை காய்கறிகள் வாங்கவும், இருசக்கர வாகனங்களில் பயணிக்கவும், வீடு வீடாகச் சென்று பிரசாரம் செய்யவும் நாம் கட்டாயப்படுத்தியதே நம்முடைய மிகப்பெரிய வெற்றி. இது கங்கோத்ரியைச் சேர்ந்த பாஜக தொண்டர்களின் கனவு.
மேற்கு வங்கத்தின் முந்தைய காலத்தில், காங்கிரஸ் மற்றும் சிபிஐ(எம்) க்கும் இடையில் போட்டி நிலவியது. பின்னர், அது காங்கிரஸ் மற்றும் திரிணமூல் காங்கிரஸ் ஆகியவற்றுக்கு இடையேயான போட்டியாக மாறியது.
தற்போது, திரிணமூல் காங்கிரஸ் மற்றும் பாஜகவுக்கும் இடையேயான போட்டியாக அது உருவெடுத்துள்ளது. இது ஒரு நேரடியானப் போட்டி. எந்த விலை கொடுத்தாவது திரிணமூல் காங்கிரஸை ஆட்சியிலிருந்து வேரோடு பிடுங்கி எறிய வேண்டும் என்பது மக்களின் மனநிலையாக உள்ளது” எனத் தெரிவித்தார்.
Summary
BJP leader Samik Bhattacharya has stated that the contest in the West Bengal Assembly elections is between the Trinamool Congress and the BJP.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மேற்கு வங்க ‘அம்மா உணவகத்தில்’ சாப்பிட பிரதமருக்கு திரிணமூல் அழைப்பு!

பிரதமரை உணவருந்த அழைத்த திரிணமூல் காங்கிரஸ்!

திரிணமூல் காங்கிரஸை பெண்கள் தண்டிப்பா்: பிரதமா் மோடி
திரிணமூல் காங்கிரஸ் பெயரில் பணம் பறிக்கும் பாஜக: மமதா பானர்ஜி
வீடியோக்கள்
விஜய் தவறான கருத்தை விதைக்கிறார்! - Tamilisai விமர்சனம்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | மே 4-ல் நிகழப்போகிறதா புரட்சி? | News & Views | Epi - 29 | Dinamani
தினமணி செய்திச் சேவை

மனைவியை விதவை என விமர்சித்த தொகுப்பாளர்! கோவத்தில் Trump | Jimmy Kimmel
இணையதளச் செய்திப் பிரிவு

திருச்செந்தூரில் விஜய் சாமி தரிசன ரகசியம் ! | TVK Vijay | Tiruchendur Murugan Temple | TN Election 2026
தினமணி செய்திச் சேவை


