மேற்கு வங்கத்தில் 20 திரிணமூல் எம்.பி.க்கள் பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்தது குறித்து பேசிய காங்கிரஸ் தலைவர் கே.சி.வேணுகோபால், பாஜக ஆட்சியைப் பிடிப்பதற்காக தேர்தல் ஆணையத்தை தவறாக பயன்படுத்துவதாக செவ்வாய்க்கிழமை (ஜூன் 9) குற்றம் சாட்டினார்.
அண்மையில் நடைபெற்று முடிந்த மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில், திரிணமூல் காங்கிரஸ் கட்சி 80 தொகுதிகளில் மட்டுமே வென்றதால், ஆட்சியை இழந்தது.
சட்டப்பேரவை திரிணமூல் காங்கிரஸ் குழுத் தலைவர் (எதிர்க்கட்சித் தலைவர்), துணைத் தலைவர், தலைமை கொறடா நியமனத்தில் மமதா பானர்ஜி முடிவுக்கு எதிராக கட்சியில் குரலெழுப்பப்பட்டது. இதனால் கட்சி இரண்டு அணிகளாகப் பிரிந்தன. இதனைத் தொடர்ந்து, கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ரிதபிரத பானர்ஜியை சட்டப்பேரவை திரிணமூல் காங்கிரஸ் குழுத் தலைவராக நியமிக்க 58 எம்எல்ஏக்கள்ஆதரவு தெரிவித்தனர்.
இந்த நிலையில், சட்டப்பேரவையைத் தொடர்ந்து மக்களவையிலும் திரிணமூல் காங்கிரஸ் இரண்டு அணிகளாகப் பிளவுபட்டுள்ளன. அக்கட்சியைச் சேர்ந்த 28 எம்.பி.க்களில் 20 எம்.பி.க்கள் பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணிக்கு ஆதரவு தெரிவிப்பதாக மக்களவைத் தலைவர் ஓம் பிா்லாவிடம் நேற்று (ஜூன் 8) கடிதம் கொடுத்தனர்.
இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் கே.சி. வேணுகோபால் பேசியதாவது:
ஏற்கெனவே, மகாராஷ்டிரத்தில் பாஜக இந்த செயலைச் செய்து முடித்தது. தற்போது, மேற்கு வங்கத்திலும் அதே செயலைச் செய்து முடித்துள்ளனர். ஒருபுறம் ஆட்சியைப் பிடிப்பதற்காக தேர்தல் ஆணையத்தை பாஜக தவறாகப் பயன்படுத்துகிறது.
மறுபுறம் ஆட்சியைப் பிடித்ததற்குப் பிறகு, ஜனநாயக விரோத வழிகளில் எதிர்க்கட்சியை முற்றிலுமாக அழிக்க முயற்சிக்கிறார்கள். இவையெல்லாம் நீடிக்கும் என்று நான் நினைக்கவில்லை. இவையனைத்தையும் கேள்விக்குட்படுத்த வேண்டிய நேரம் வரும். அதில் நாங்கள் மிகவும் உறுதியாக இருக்கிறோம் என்று தெரிவித்தார் கே.சி. வேணுகோபால்.
Summary
Speaking about 20 Trinamool MPs in West Bengal extending their support to the BJP, Congress leader K.C. Venugopal accused the BJP of misusing the Election Commission to capture power.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பாஜக கூட்டணிக்கு 20 திரிணமூல் எம்.பி.க்கள் ஆதரவு: மக்களவைத் தலைவருக்கு கடிதம்

துரோகமிழைக்கும் சந்தர்ப்பவாத கட்சி காங்கிரஸ்: பாஜக கடும் தாக்கு

177 தொகுதிகள் வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு! பாஜக மீது மமதா குற்றச்சாட்டு!

பாஜக தலைவரின் உதவியாளர் கொலை: திரிணமூல் காங்கிரஸ் கண்டனம்!
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி




