இந்தியாவில் 5 மாநிலங்களின் தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன.
தமிழ்நாடு, கேரளம், புதுச்சேரி, அஸ்ஸாம் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் இன்று காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகின்றது.
வாக்கு எண்ணிக்கை பல இடங்களில் முடிவுற்ற நிலையில் 5 மாநில முதல்வர்களின் வெற்றி விவரங்கள் கீழே:
1. தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் - தோல்வி
தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் 4வது முறையாகப் போட்டியிட்ட நிலையில் 74,202 வாக்குகள் பெற்று தவெக வேட்பாளர் வி.எஸ்.பாபுவிடம் 8,795 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.
தமிழ்நாட்டில் ஆளும் திமுக அரசைப் பின்னுக்குத் தள்ளி விஜய்யின் தவெக பெரும்பாலான இடங்களில் முன்னிலை வகித்து வருகின்றது.
2. கேரள முதல்வர் பினராயி விஜயன் - வெற்றி
கேரள முதல்வர் பினராயி விஜயன் தர்மடம் சட்டப்பேரவைத் தொகுதியில் 85,614 வாக்குகள் பெற்று 19,247 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். முதல்வராக தொடர்ந்து கடந்த 3 தேர்தல்களிலும் பின்ராயி வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
கேரளத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான ஆட்சியை வீழ்த்தி காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்துள்ளது.
3. புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி - வெற்றி
புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தட்டாஞ்சாவடி, உப்பளம் என இரு தொகுதிகளில் போட்டியிட்ட நிலையில் தட்டாஞ்சாவடி தொகுதியில் 10,024 வாக்குகள் பெற்று 4,441 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
மங்களம் தொகுதியில் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறார்.
புதுச்சேரியில் என்.ஏர்.காங்கிரஸ் கட்சி தனது ஆட்சியைத் தக்க வைத்துள்ளது.
4. அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்த விஸ்வ சர்மா - வெற்றி
அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்த விஸ்வ சர்மா ஜலுக்பரி தொகுதியில் போட்டியிட்ட நிலையில் 1,26,000-க்கும் மேற்பட்ட வாக்குகளைப் பெற்று 89,000-க்கும் மேற்பட்ட வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்.
அஸ்ஸாமில் பெரும்பான்மை இடங்களில் வென்று பாஜக தனது ஆட்சியைத் தக்க வைத்துள்ளது.
5. மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி - நிலுவை
மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி போட்டியிட்ட பவானிபூர் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை முடிவடைய உள்ள நிலையில் மிக குறைந்த வாக்கு வித்தியாசத்தில் மமதாவுக்கும், அவருக்கு எதிராகப் போட்டியிட்ட பாஜகவின் சுவேந்து அதிகாரிக்கும் இடையே கடுமையான போட்டி நிலவி வருகின்றது.
மேற்கு வங்கத்தில் 200+ இடங்களுக்கு மேல் முன்னிலையில் உள்ள பாஜக, ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியை வீழ்த்தியுள்ளது.
Summary
5-State Election Results! Did the Chief Ministers Win?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அதிக, குறைந்தபட்ச வாக்கு வித்தியாசங்களில் வென்ற தவெகவினர்!

குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற 10 பேர்! முதலிடத்தில் 1 வாக்கு!

புதுமுக தவெக வேட்பாளா்களிடம் தோல்வி கண்ட அமைச்சா்கள்!

கள்ளக்குறிச்சி தொகுதியில் 798 வாக்கு வித்தியாசத்தில் தவெக வெற்றி
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



