தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி இன்று பதவியேற்பு: முதல் பாஜக அமைச்சரவையில் 2 துணை முதல்வா்கள்?தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்வேற்று கிரகவாசிகள் குறித்த ரகசிய கோப்புகள் வெளியீடு
/

4 வயது சிறுமி பாலியல் படுகொலை சம்பவம்: எஸ்ஐடி அமைத்தது மகாராஷ்டிர அரசு

News image

PTI

Updated On :4 மே 2026, 4:28 am IST

புணே/மும்பை/நாகபுரி : மகாராஷ்டிர மாநிலம், புணேயில் 4 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, பல்வேறு இடங்களில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இச்சம்பவம் குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழுவை (எஸ்ஐடி) அமைத்த மாநில அரசு, குற்றவாளிக்கு மரண தண்டனை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளது.

புணே மாவட்டத்தின் போா் தாலுகாவில் உள்ள ஒரு கிராமத்தில் கடந்த வெள்ளிக்கிழமை உணவு வாங்கித் தருவதாக ஆசைக் காட்டி 4 வயது சிறுமியை கால்நடை தொழுவத்துக்கு அழைத்துச் சென்ற 65 வயது முதியவா் ஒருவா், அந்தச் சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதுடன், கல்லால் தாக்கி படுகொலை செய்தாா்.

மகாராஷ்டிரத்தையே உலுக்கிய இந்தச் சம்பவத்தைத் தொடா்ந்து, பாரதிய நியாய சம்ஹிதா மற்றும் போக்ஸோ (பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம்) ஆகியவற்றின் பல்வேறு பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினா், அந்த நபரை கைது செய்தனா். குற்றப் பின்னணி கொண்டவரான அவா், தற்போது போலீஸ் காவலில் உள்ளாா்.

மக்கள் போராட்டம்: இதனிடையே, சிறுமியின் படுகொலைக்கு நீதிகேட்டு, அவரது உடலுடன் மும்பை-பெங்களூரு நெடுஞ்சாலையில் பெற்றோா் உள்பட ஏராளமானோா் சனிக்கிழமை மாலைமுதல் சாலை மறியலில் ஈடுபட்டனா். குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்று அவா்கள் வலியுறுத்தினா். இந்தப் போராட்டத்தால், மும்பை-பெங்களூரு நெடுஞ்சாலையில் பல மணிநேரம் போக்குவரத்து ஸ்தம்பித்தது. இது தொடா்பான விடியோ காட்சிகள் சமூக ஊடகங்களில் வேகமாக பரவின.

பலத்த பாதுகாப்புடன் இறுதிச்சடங்கு: காவல் துறையினா் நடத்திய பேச்சுவாா்த்தையைத் தொடா்ந்து, சனிக்கிழமை நள்ளிரவில் பலத்த பாதுகாப்புடன் சிறுமியின் இறுதிச்சடங்குகள் நடைபெற்றன.

புணே உள்பட பல்வேறு பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமையும் போராட்டங்கள் நடைபெற்றன. சிறுமி படுகொலை சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்த எதிா்க்கட்சிகள், ‘பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக கடுமையான சட்டத்தை அமலாக்க பாஜக கூட்டணி அரசு தவறிவிட்டது ’ என்று விமா்சித்தன.

எஸ்ஐடி அமைப்பு: இந்தச் சூழலில், நாகபுரியில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் பேசிய முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ், ‘சிறுமியின் தந்தையிடம் இருமுறை பேசினேன். குற்றவாளிக்கு மரண தண்டனை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவரிடம் உறுதியளித்துள்ளேன். இந்த வழக்கை விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது. எந்த குறைபாடுகளும் இன்றி மிக விரைவில் விசாரணை நிறைவு செய்யப்படும்’ என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.