மணிப்பூர் குண்டுவீச்சுத் தாக்குதலில் பலியான குழந்தைகளின் உடல்கள் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டன.
மணிப்பூரின் பிஷ்ணுபூர் மாவட்டத்தின் த்ரோங்லாபியில் கடந்த 7ஆம் தேதி நடந்த குண்டுவீச்சுத் தாக்குதலில் இரண்டு குழந்தைகள் பலியாகினர். இதனால் ஐந்து பள்ளத்தாக்கு மாவட்டங்களில் பரவலான வன்முறை போராட்டங்கள் வெடித்தன. அதைத்தொடர்ந்து இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமையிடம் ஒப்படைக்கப்பட்டது.
குற்றவாளிகள் விரைவில் சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்று கோரி, குடும்பத்தினர் உடல்களைப் பெற்றுக்கொள்ள மறுத்து வந்தனர். இதையடுத்து, ஐந்து வயது சிறுவன் மற்றும் அவனது ஆறு மாத சகோதரியின் உடல்கள் இம்பாலில் உள்ள மண்டல மருத்துவ அறிவியல் நிறுவனத்தின் சவக்கிடங்கில் 25 நாட்களாக வைக்கப்பட்டிருந்தன.
இதனிடையே குழந்தைகளின் உடல்களைப் பெற்றுக்கொள்ளுமாறு முதல்வர் ஒய். கெம்சந்த் சிங் கடந்த 25ஆம் தேதி அவர்களது குடும்பத்தினரிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார். இந்த நிலையில் குழந்தைகளின் உடல்கள் சனிக்கிழமை குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டன.
இதைத்தொடர்ந்து இறுதிச் சடங்கிற்காக குழந்தைகளின் உடல்கள் திறந்த வாகனத்தில் எடுத்துச்செல்லப்பட்டது. அப்போது த்ரோங்லாபி செல்லும் வழியெங்கும் நூற்றுக்கணக்கான மக்கள் அணிவகுத்து நின்று உடல்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
Summary
The mortal remains of two children, who were killed in a bomb attack in Manipur's Bishnupur district in April, were handed over to family members on Saturday, officials said.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
முற்றுப்புள்ளி விழ வேண்டும்!

மணிப்பூர் வெடிகுண்டு தாக்குதல்! குற்றவாளிகளைக் கைது செய்யக்கோரி கண்டன பேரணி!

மணிப்பூரில் வெடிகுண்டு தாக்குதல்! 2 குழந்தைகள் பலி!

கழிவுநீர் தொட்டியில் விழுந்த 2 ஊழியர்கள் பலி: 8 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு உடல்கள் மீட்பு
விடியோக்கள்

விஜய் அடுத்தடுத்து எடுக்கும் முடிவுகள்...: வலைப்பேச்சு அந்தணன் Exclusive | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை
கொளத்தூரில் மு.க. ஸ்டாலின் கண்ணீரில் திமுக தொண்டர்கள்! | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக அழைத்தால் என்ன செய்வீர்கள்? விசிக, கம்யூ. தலைவர்கள் விளக்கம்! | VCK | CPI | CPM
தினமணி செய்திச் சேவை

தவெகவை நோக்கி நகரும் காங்கிரஸ் | TVK Vijay | TN Election 2026 | Congress | TVK 108
தினமணி செய்திச் சேவை



