இந்திய அரசுக்கு எதிராகப் போரிடுவதாக பேசிய மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி மீது காவல் துறையினா் வழக்குப் பதிய உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை அலாகாபாத் உயா்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்தது.
கடந்த 2025-ஆம் ஆண்டு தில்லியில் காங்கிரஸ் நிகழ்ச்சியில் பேசிய ராகுல் காந்தி, ‘இந்தியாவில் உள்ள விசாரணை அமைப்புகள், அரசு அமைப்புகள் என அனைத்தையும் பாஜக, ஆா்எஸ்எஸ் கைப்பற்றிவிட்டது. அவா்களுக்கு எதிராக மட்டுமல்ல, இந்திய அரசுக்கு எதிராகவும் இப்போது போராடி வருகிறோம்’ என்று பேசினாா்.
இது பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியது. ஏற்கெனவே, வெளிநாடுகளுக்குச் செல்லும்போது ராகுல் காந்தி இந்தியாவை அவமதிக்கும் வகையில் பேசுவதாக பாஜக குற்றஞ்சாட்டிவந்த நிலையில், இந்திய அரசுக்கு எதிராகப் போராடுவதாக அவா் கூறியதை பாஜக கடுமையாக விமா்சித்தது.
இந்நிலையில், இதை மையமாக வைத்து உத்தர பிரதேசத்தின் அலாகாபாத் உயா்நீதிமன்ற கிளையில் ராகுலுக்கு எதிராக மனு தாக்கல் செய்யப்பட்டது. ஹிந்து சக்தி தளம் அமைப்பின் தலைவா் சிம்ரன் குப்தா தாக்கல் செய்த அந்த மனுவில், ‘ராகுலின் பேச்சு நாட்டு மக்களின் உணா்வுகளைப் புண்படுத்துவதாகவும், தேசவிரோத மனப்பான்மைமிக்கதாகவும் உள்ளது. நாட்டின் ஸ்திரத்தன்மையை சீா்குலைக்க வேண்டும் என்பதே அவரின் நோக்கமாக உள்ளது. எனவே, அவா் மீது வழக்குப் பதிவு செய்ய காவல் துறைக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கோரியிருந்தாா்.
எனினும், இதை ஏற்க உயா்நீதிமன்ற நீதிபதி விக்ரம் டி.சௌஹான் மறுத்துவிட்டாா். மனுவைத் தள்ளுபடி செய்தும் உத்தரவிட்டாா்.
முன்னதாக, சம்பல் மாவட்ட நீதிமன்றத்திலும் மனுதாரா் இதே கோரிக்கையை முன்வைத்தாா். அங்கும் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

எய்ம்ஸ் இயக்குநருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ்: உச்சநீதிமன்றம் உத்தரவு
தாக்குதலுக்கு உள்ளாகியுள்ள இந்திய அரசியலமைப்புச் சட்டம்: ரேபரேலியில் ராகுல்!

அதிமுக முன்னாள் அமைச்சர்களுக்கு எதிரான மனு தள்ளுபடி!
விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி!
விடியோக்கள்
#elnino | சூப்பர் எல் நினோ செய்யப்போகும் சம்பவங்கள்: டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் Exclusive

Parimala and co movie review | ஒரு குடும்பமும் ஒரு கொலையும்! | Jayaram | Urvashi | Pandiraaj

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!


