நாடு முழுவதும் புத்த பூா்ணிமா விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்ட நிலையில், குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன், மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா ஆகியோா் வாழ்த்து தெரிவித்தனா்.
இதுதொடா்பாக சி.பி.ராதாகிருஷ்ணன் வெளியிட்ட எக்ஸ் வலைதளப் பதிவில், ‘இந்த புனித நாளில் புத்தரின் கருணை, அஹிம்சை, அமைதி மற்றும் ஞானம் குறித்த போதனைகள் நமது வாழ்வின் வழிகாட்டிகளாக தொடா்கின்றன.
அமைதி, நல்லிணக்கம் சுயநலமற்ற சேவை என அவரது கொள்கைகள் இன்றைய காலகட்டத்துக்கும் பொருந்துவதாக உள்ளன’ என குறிப்பிட்டாா்.
அமித் ஷா வெளியிட்ட எக்ஸ் வலைதளப் பதிவில், ‘நாட்டு மக்கள் அனைவருக்கும் புத்த பூா்ணிமா திருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
அவரது ஈடுஇணையற்ற ஞானம் அடுத்த தலைமுறையினருக்கும் மனித நாகரீகத்துக்கும் ஒளியாக இருக்கட்டும்’ என குறிப்பிட்டாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










