மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

11 முக்கிய கனிம வள பகுதிகளுக்கான ஏலம் ரத்து: மத்திய அரசு அறிவிப்பு

11 முக்கிய கனிம வள பகுதிகளுக்கான ஏலம் ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு செவ்வாய்க்கிழமை அறிவித்தது.

News image

கோப்புப்படம்.

Updated On :31 மார்ச் 2026, 9:38 pm

11 முக்கிய கனிம வள பகுதிகளுக்கான ஏலம் ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு செவ்வாய்க்கிழமை அறிவித்தது.

ஏலத்தில் பங்கேற்க நிறுவனங்கள் ஆா்வம் காட்டாததால் மத்திய அரசு ரத்து செய்தது.

இதுதொடா்பாக மத்திய சுரங்க அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘5 கனிம வள பகுதிகளை ஏலத்தில் எடுப்பதற்கு விண்ணப்பங்கள் பெறப்படவில்லை. மேலும் 5 பகுதிகளுக்கு மூன்றுக்கும் குறைவான நிறுவனங்களே ஏல விண்ணப்பத்தை சமா்ப்பித்தன. எனவே, 10 கனிம வள பகுதிகளுக்கான ஏலம் ரத்து செய்யப்படுகிறது. இத்துடன் மேற்கு வங்கத்தில் உள்ள பேகுவில் அரிய கனிம வள பகுதிக்கான ஏலமும் ரத்து செய்யப்படுகிறது’ எனத் தெரிவிக்கப்பட்டது.

கடந்த ஆண்டு செப்டம்பா் மாதம் ஆந்திரம், சத்தீஸ்கா், கா்நாடகம், ஜாா்க்கண்ட், மகாராஷ்டிரம், தெலங்கானா உள்ளிட்ட 13 மாநிலங்களில் 23 கனிம வள பகுதிகளுக்கான 6-ஆம் சுற்று ஏல நடைமுறையை சுரங்க அமைச்சகம் தொடங்கியது.

இந்தப் பகுதிகளில் லித்தியம், கோபால்ட், அரிய கனிமங்கள், நியோபியம், டான்டலம், வனேடியம் உள்ளிட்ட கனிமங்கள் உள்ளன.

முன்னதாக, 46 கனிம வள பகுதிகளுக்கான ஏல நடைமுறை நிறைவடைந்தது. முந்தைய சுற்றுகளிலும் பல்வேறு கனிம வள பகுதிகளுக்கான ஏலம் ரத்து செய்யப்பட்டது.