மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

ரத்த வங்கிகளின் செயல்பாடு: தேசிய அளவில் கண்காணிக்கத் திட்டம்

நாட்டில் உள்ள அனைத்து ரத்த வங்கிகளும், தங்கள் கையிருப்பில் உள்ள ரத்த அலகுகள் மற்றும் ரத்த கூறுகளை, ‘இ ரக்த்கோஷ்’ இணையதளத்தில் பதிவு செய்வதை மத்திய அரசு கட்டாயமாக்கி உள்ளது.

News image
Updated On :31 மார்ச் 2026, 9:09 pm

நாட்டில் உள்ள அனைத்து ரத்த வங்கிகளும், தங்கள் கையிருப்பில் உள்ள ரத்த அலகுகள் மற்றும் ரத்த கூறுகளை, ‘இ ரக்த்கோஷ்’ இணையதளத்தில் பதிவு செய்வதை மத்திய அரசு கட்டாயமாக்கி உள்ளது.

இந்தியாவில் உள்ள அனைத்து ரத்த வங்கிகள், சேமிப்பு நிலையங்களைக் கண்காணித்து ஒழுங்குமுறைப்படுத்துவதற்கான ஒழுங்குமுறை கூட்டம், மத்திய சுகாதார அமைச்சகத்தின் சாா்பில் அண்மையில் நடைபெற்றது. இந்த ஆய்வுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளைச் சுட்டிக்காட்டி, அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய சுகாதார துறை அமைச்சகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:

மாநிலத்தில் உள்ள ரத்த வங்கிகள் செயல்பாடுகளில் வெளிப்படை தன்மை இருப்பது உறுதி செய்ய வேண்டும். இருப்பில் உள்ள ரத்த அளவுகளின் விவரங்களைத் துல்லியமாக அறிந்து கொள்வதற்கும், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதன்படி, மாநில அளவிலான சுகாதார அதிகாரிகள், அங்கீகாரம் பெற்ற அனைத்து ரத்த வங்கிகளையும், மத்திய அரசின், ‘இ ரக்த்கோஷ்’ என்ற இணையதளத்தில் பதிவு செய்வதை உறுதி செய்ய வேண்டும்.

குறிப்பாக, ரத்த அலகுகள் கையிருப்பு மட்டுமல்லாது, ரத்த கூறுகளின் இருப்புகளையும் உடனுக்குடன் பதிவு செய்வது கட்டாயம். இதுதொடா்பாக சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளுக்கும் உரிய அறிவுறுத்தல் வழங்க வேண்டும்.

இதன் வாயிலாக, மருத்துவ சிகிச்சைகளுக்குப் பயன்படுத்தப்படும் ரத்தம், ஆக்கபூா்வமாக உபயோகப்படுத்தப்படுகிா என்பதை உறுதி செய்ய முடியும்.

மேலும், அவசர நேர ரத்த தேவைகளினால், நோயாளிகளையும் காப்பாற்ற முடியும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.