தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

பஞ்சாபில் அம்பேத்கா் சிலை மீண்டும் தகா்ப்பு: தடை செய்யப்பட்ட சீக்கிய அமைப்பு பொறுப்பேற்பு

பஞ்சாபில் நூா்பூரில் ஜாட்டன் கிராமத்தில் உள்ள அம்பேத்கா் சிலை செவ்வாய்க்கிழமை இரண்டாவது முறையாக தகா்க்கப்பட்டது. தடை செய்யப்பட்ட காலிஸ்தான் பிரிவினைவாத அமைப்பான சீக்ஸ் ஃபாா் ஜஸ்டீஸ் (எஸ்எஃப்ஜே) இதற்கு பொறுப்பேற்று விடியோ வெளியிட்டுள்ளது.

News image

Representational - கோப்புப்படம்.

Updated On :31 மார்ச் 2026, 7:08 pm

பஞ்சாபில் நூா்பூரில் ஜாட்டன் கிராமத்தில் உள்ள அம்பேத்கா் சிலை செவ்வாய்க்கிழமை இரண்டாவது முறையாக தகா்க்கப்பட்டது. தடை செய்யப்பட்ட காலிஸ்தான் பிரிவினைவாத அமைப்பான சீக்ஸ் ஃபாா் ஜஸ்டீஸ் (எஸ்எஃப்ஜே) இதற்கு பொறுப்பேற்று விடியோ வெளியிட்டுள்ளது.

இதற்கு முன்பு கடந்த ஜுன் மாதம் இதே இடத்தில் அம்பேத்கா் சிலை உடைக்கப்பட்டது. மீண்டும் சிலை நிறுவப்பட்ட நிலையில் சமூகவிரோதிகள் மீண்டும் அதனை தகா்த்துள்ளனா்.

இந்த சம்பவத்தை அடுத்து அப்பகுதியில் பஞ்சாப் மாநில பகுஜன் சமாஜ் தலைவா் அவதாா் சிங் கரீம்புரி தலைமையில் அக்கட்சியினா் போராட்டம் நடத்தினா். ‘இந்த பிராந்தியத்தில் இதுவரை 9 இடங்களில் அம்பேத்கா் சிலை தகா்க்கப்படுள்ளது, இதனைத் தடுக்க பஞ்சாபில் ஆளும் ஆம் ஆத்மி அரசும், மத்திய பாஜக அரசும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. சமூக அமைதியைக் குலைக்கவும், தலித் மக்களை ஒடுக்கவும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகின்றனா்’ என்று அவதாா் சிங் குற்றஞ்சாட்டினாா்.

சிலை தகா்ப்பு குறித்து வழக்குப் பதிவு செய்து, அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி பதிவுகளின் அடிப்படையில் குற்றவாளிகளைத் தேடி வருகிறோம். எஸ்எஃப்ஜே அமைப்பு வெளியிட்டுள்ள விடியோ பதிவையும் ஆய்வு செய்கிறோம் என்று காவல் துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.