இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் பாதுகாப்புப்படையின் பயங்கரவாத ஒடுக்க நடவடிக்கையில் தடை செய்யப்பட்ட இயக்கத்தைச் சேர்ந்த 6 பேர் கொல்லப்பட்டனர்.
தடை செய்யப்பட்ட இயக்கத்தைச் சேர்ந்த தீவிரவாதிகள் சிலர் பலூசிஸ்தான் மாகாணத்தின் மஸ்தங்க் நகரின் கீர்த்காப் பகுதியில் பதுங்கியிருப்பதாகக் கிடைத்த உளவுத் தகவலையடுத்து அந்தப் பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட பாதுகாப்புப்படையினர் பயங்கரவாதிகள் 6 பேரை செவ்வாய்க்கிழமை(ஏப். 7) கொன்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்தத் தாக்குதல்களில் இருந்து தப்பிக்க தீவிரவாதிகள் சிலர் மலைப் பகுதிகளுக்கு தப்பியோடியதாகவும் அவர்கள் இருந்த இடங்களிலிருந்து ஏராளமான ஆயுதங்களும் வெடிப் பொருள்களும் கைப்பற்றப்பட்டிருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
பாகிஸ்தானின் வடமேற்குப் பகுதியில் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் பயங்கரவாத முகாம்களைக் குறிவைத்து அந்நாட்டின் ராணுவம் நடத்திய ட்ரோன் வழி தாக்குதல்களில் லஷ்கர் பயங்கரவாதிகள் 3 பேர் கொல்லப்பட்டதாக கடந்த திங்கள்கிழமை தெரிவிக்கப்பட்ட நிலையில், பாகிஸ்தானில் மேலும் 6 பேர் செவ்வாய்க்கிழமை கொல்லப்பட்டனர்.
Summary
Pakistani security forces have killed six militants during an intelligence-based operation in the troubled Balochistan province, an official said on Wednesday.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

லஷ்கர் பயங்கரவாதிகள் 3 பேர் பாகிஸ்தானில் கொலை!

புயல், கனமழை, நிலநடுக்கம்... ஆப்கன், பாகிஸ்தானில் 133 பேர் பலி!

பாகிஸ்தானில் கார் குண்டு தாக்குதல்: 5 பேர் பலி

பாகிஸ்தான்: குடும்பத் தகராறில் பயங்கரவாதி சுட்டுக் கொலை!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


