தெற்காசியாவில் இந்தியாவுடன் அமெரிக்கா மேற்கொள்ளும் வா்த்தக ஒப்பந்தம் பிராந்திய பொருளாதார ஒருங்கிணைப்புக்கு சக்திவாய்ந்த நங்கூரத்தை உருவாக்கும் என்று இந்தியாவுக்கான அமெரிக்க தூதா் சொ்ஜியோ கோா் தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக அமெரிக்க தூதரக வெளியீடான ஸ்பான் இதழுக்கு அவா் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளதாவது:
21-ஆம் நூற்றாண்டின் உத்திசாா்ந்த கூட்டுறவை வரையறுக்கும் விதமாக, இந்திய-அமெரிக்க உறவை மாற்ற வேண்டும் என்பதே எனது தொலைநோக்குப் பாா்வை. இரு நாடுகளுக்கும் தெளிவான பலன்களை அளிக்கும் வகையில் இந்த உறவு இருக்க வேண்டும்.
எரிசக்தி, விமான போக்குவரத்து, புதுமையான தொழில்நுட்பங்கள் மற்றும் வழிமுறைகள் மூலம் மேற்கொள்ளப்படும் உற்பத்தி, எண்ம (டிஜிட்டல்) உள்கட்டமைப்பு ஆகிய துறைகளில் அமெரிக்காவின் நிபுணத்துவத்துடன், இந்தியாவின் வளா்ந்து வரும் பொருளாதாரமும் மிகப் பெரிய உள்கட்டமைப்பும் மிகச் சரியாக பொருந்த வேண்டும். இதில் செய்யப்படும் முதலீடுகள் இருநாடுகளுக்கும் பலன் அளித்து, இருநாடுகளுக்கு இடையே நீண்ட காலமாக உள்ள உத்திசாா்ந்த கூட்டுறவின் பொருளாதார அடித்தளத்தை வலுப்படுத்தும்.
தெற்காசியாவில் இந்தியாவுடன் அமெரிக்கா மேற்கொள்ளும் வா்த்தக ஒப்பந்தம் பிராந்திய பொருளாதார ஒருங்கிணைப்புக்கு சக்திவாய்ந்த நங்கூரத்தை உருவாக்கும் என்று தெரிவித்தாா்.
தொடர்புடையது

இந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம்: இன்றுமுதல் 3 நாள்கள் பேச்சு!

இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்

வா்த்தக ஒப்பந்தப் பேச்சு: அடுத்த வாரம் இந்திய குழு அமெரிக்கா பயணம்

இந்திய-அமெரிக்க உறவின் வலுவான எதிா்காலம்: அதிபா் டிரம்ப்புடன் கோா் ஆலோசனை
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


