மேற்கு கரை மீதான இஸ்ரேலின் நடவடிக்கைகளை எதிர்க்க பிரதமர் நரேந்திர மோடிக்கு துணிச்சல் இல்லை என காங்கிரஸ் கட்சியின் தகவல் தொடர்பு பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.
இஸ்ரேல் அரசு தனது “கிரேட்டர் இஸ்ரேல்” எனும் திட்டத்தை நோக்கி நகர்ந்து வருவதாகவும், அதை எதிர்க்க பிரதமர் மோடிக்கு துணிச்சல் இல்லை எனவும் ஜெய்ராம் ரமேஷ் தனது விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
இதுகுறித்து, அவர் சனிக்கிழமை (மார்ச் 28) அன்று வெளியிட்ட எக்ஸ் தளப் பதிவில் கூறியதாவது:
“கடந்த 4 வாரங்களாக உலகின் பார்வை முழுவதும் ஹோர்முஸ் நீரிணை மற்றும் வளைகுடா நாடுகளின் எரிசக்தி கட்டமைப்புகள் மீதுதான் உள்ளன.
இஸ்ரேல் (i) காஸா மக்கள் மீதான கொடூரங்களைத் தொடர்ந்து நடத்தி வருகிறது; (ii) தெற்கு லெபனானில் தனக்கான பெரிய இடைநிலை மண்டலத்தை உருவாக்கும் நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது; (iii) மேற்கு கரையை ஆக்கிரமித்து இணைத்துக்கொள்ளும் நடவடிக்கைகளை மேற்கொள்கிறது.
ஈரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்கள் பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணம் முடிந்த 2 நாள்களில் தொடங்கின. இதில், அவர் (பிரதமர் மோடி) அங்கு செல்வதற்கு சில நாள்களுக்கு முன்புதான் 1967-ஆம் ஆண்டுக்குப் பிறகு முதன்முறையாக, ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையின் பெரும்பகுதியை நிலப் பதிவு செய்வதற்கு இஸ்ரேலிய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.
இதனால், லட்சக்கணக்கான பாலஸ்தீனர்கள் தங்களது சொத்துக்களை இழக்க நேரிடும். ஆனால், தனது நல்ல நண்பரான இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிராகக் குரல் கொடுக்க பிரதமர் மோடிக்கு துணிச்சல் இல்லை” எனக் கூறியுள்ளார்.
முன்னதாக, பிரதமர் நரேந்திர மோடியின் இஸ்ரேல் பயணம் நிறைவடைந்த 2 நாள்களில் ஈரான் மீதான அமெரிக்க - இஸ்ரேலின் கூட்டுத் தாக்குதல்கள் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.
Summary
Congress party has said that PM Modi lacks the courage to oppose Israel's actions in the West Bank.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
அரசியலில் அதிகளவிலான பெண்கள் நுழைய வேண்டும்: பிரதமர் மோடி

காளியும் கருப்புதான்!! கருப்பு உடையை விமர்சித்த மோடிக்கு கனிமொழி பதில்!
மேற்கு வங்கத்தில் பிரதமர் மோடி நாளை பிரசாரம்!
ஈரான் போர்: மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை(மார்ச் 27) ஆலோசனை!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


