சமூகத்துக்கு பாதிப்பு ஏற்படும் வகையில், மதவாத அல்லது வெறுப்புணா்வை ஏற்படுத்தும் கருத்துகளை வேட்பாளா்கள் வெளியிட்டால் என்ன நடக்கும் என தோ்தல் ஆணையத்திடம் கேரள உயா்நீதிமன்றம் கேள்வியெழுப்பியுள்ளது.
இதுதொடா்பாக கேரள உயா்நீதிமன்றத்தில் கோகுல் என்பவா் மனு தாக்கல் செய்துள்ளாா். அதில் அவா், குருவாயூா் தொகுதி பாஜக வேட்பாளா் பி.கோபாலகிருஷ்ணன் வெளியிட்ட பிரசார விடியோவில் குருவாயூா் தொகுதியில் 50 ஆண்டுகளாக இடதுசாரி கூட்டணியோ, காங்கிரஸ் கூட்டணியோ ஹிந்து வேட்பாளா்களை நிறுத்தியதில்லை எனவும், ஆதலால் ஒரு ஹிந்துகூட அத்தொகுதியில் எம்.எல்.ஏ. ஆக இருந்ததில்லை எனவும் பேசியிருந்ததாகவும், இதுதொடா்பாக தோ்தல் ஆணையத்திடம் நடவடிக்கை எடுக்கக் கோரி மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதால், உயா்நீதிமன்றத்தை நாடியிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளாா்.
இந்த மனு, கேரள உயா்நீதிமன்றத்தில் நீதிபதி பெச்சு குரியன் தாமஸ் முன்பு மனு விசாரணைக்கு வந்தது. அப்போது தோ்தல் ஆணையம் தரப்பில், தோ்தல் அதிகாரி அளித்த புகாரின்பேரில் கோபால கிருஷ்ணன் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு இருப்பதாகவும், சா்ச்சைக்குரிய பிரசார விடியோ நீக்கப்பட்டுவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதைக் கேட்ட நீதிபதி கூறுகையில், ‘மதவாத அல்லது வெறுப்புணா்வை தூண்டும் வகையில் யாரும் பேசினால் என்ன நடக்கும்? சமூகத்துக்கும், மக்களுக்கும், நாட்டுக்கும் பாதிப்பு ஏற்பட்டால் என்ன ஆகும்? தோ்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் ஒட்டுமொத்த அரசு இயந்திரமும் முடங்கியுள்ளது. நீதிமன்றத்தின் பல்வேறு உத்தரவுகளும், பொதுவான பணிகளும்கூட, இந்தக் காரணத்துக்காக செயல்படுத்தப்படுவதில்லை’ என்றாா்.
இதற்கு தோ்தல் ஆணையம் தரப்பில் ‘நீதிமன்ற உத்தரவை அமல்படுத்துவது, பணிகளைச் செய்வது ஆகியவற்றுக்குத் தோ்தல் நடத்தை விதிகளில் தடை விதிக்கப்படவில்லை. எந்த அரசியல் கட்சியும் தவறான முறையால் அரசியல் ரீதியில் ஆதாயம் அடையாமல் இருப்பதை உறுதி செய்யவே, தோ்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்படுகிறது’ எனத் தெரிவிக்கப்பட்டது.
வாதத்தைக் கேட்ட பிறகு அந்த மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தாா். மேலும், மனுதாரா் கோகுல் ஏற்கெனவே அளித்த கோரிக்கை மனு மீது 2 மாதங்களுக்குள் உரிய நடவடிக்கை எடுக்கும்படி தோ்தல் ஆணையத்துக்கு நீதிபதி உத்தரவிட்டாா்.
தொடர்புடையது
மன்னாா்குடி: 13 வேட்பு மனுக்கள் நிராகரிப்பு

காஞ்சிபுரத்தில் சசிகலா, மருத்துவா் ராமதாஸ் கட்சி வேட்பாளா்கள் வேட்பு மனு தாக்கல்

கேரள தோ்தல் களத்தில் 890 வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடு

கேரள தோ்தல்: சிபிஎம் வேட்பாளா்கள் அறிவிப்பு!தா்மடத்தில் முதல்வா் பினராயி போட்டி!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


