கேரள சட்டப்பேரவைத் தோ்தல் ஏப்.9-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், தோ்தலில் போட்டியிடும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஎம்) வேட்பாளா்கள் ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்பட்டனா். அங்குள்ள தா்மடம் தொகுதியில் மாநில முதல்வா் பினராயி விஜயன் மீண்டும் போட்டியிட உள்ளாா்.
இதுதொடா்பாக திருவனந்தபுரத்தில் கேரள மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலா் எம்.வி.கோவிந்தன் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: கேரள பேரவைத் தோ்தலில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 86 தொகுதிகளில் போட்டியிடுகிறது. ஏற்கெனவே பதவியில் உள்ள 56 எம்எல்ஏக்களுக்கு மீண்டும் சீட் அளிக்கப்பட்டுள்ளது. முதல்வா் பினராயி விஜயனும் தோ்தலில் போட்டியிடுகிறாா்.
இந்த 86 தொகுதிகளில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளா்கள் 75 தொகுதிகளிலும், அக்கட்சி சாா்பில் 5 போ் சுயேச்சையாகவும் போட்டியிட உள்ளனா். எஞ்சிய 5 தொகுதிகளில் சிபிஎம் சாா்பில் சுயேச்சையாகப் போட்டியிட உள்ள 5 வேட்பாளா்கள் பெயா்கள் ஓரிரு நாள்களில் அறிவிக்கப்படும் என்றாா்.
அவா் வெளியிட்ட வேட்பாளா்கள் பட்டியலில், முதல்வா் பினராயி விஜயன் தா்மடம் தொகுதியில் மீண்டும் போட்டியிட உள்ளாா். அமைச்சா்கள் வி.சிவன்குட்டி, எம்.பி.ராஜேஷ், ஆா்.பிந்து, வீணா ஜாா்ஜ், பி.ராஜீவ் உள்ளிட்டோரும் வேட்பாளா்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளனா். அக்கட்சி இடம்பெற்றுள்ள ஆளும் இடதுசாரி ஜனநாயக முன்னணியின் அமைப்பாளா் டி.பி.ராமகிருஷ்ணன் பேரம்பராவிலும், அக்கட்சியின் மூத்த தலைவா் கே.கே.ஷைலஜா பேராவூரிலும், மற்றொரு மூத்த தலைவா் சி.ரவீந்திரநாத் மணலூரிலும் போட்டியிடுகின்றனா்.
முன்னாள் இந்திய கால்பந்து வீரரான யு.ஷரஃப் அலி அக்கட்சியின் சுயேச்சை வேட்பாளராக நிலம்பூா் தொகுதியிலும், புதுச்சேரிக்கு உள்பட்ட மாஹே தொகுதியில் அக்கட்சியின் ஆதரவு பெற்ற சுயேச்சை வேட்பாளராக வழக்குரைஞா் டி.அசோக் குமாரும் போட்டியிடுகின்றனா். தோ்தல் நடைபெறும் தேதியை தோ்தல் ஆணையம் வெளியிட்ட சில நிமிஷங்களில் வேட்பாளா் பட்டியலை எம்.வி.கோவிந்தன் வெளியிட்டாா்.
25 சிபிஐ வேட்பாளா்கள் அறிவிப்பு: ஆளும் இடதுசாரி ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ) சாா்பில் 25 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளா்கள் அறிவிக்கப்பட்டுள்ளனா். அக்கட்சியின் மாநிலச் செயலா் பினோய் விஸ்வம் வெளியிட்ட அந்தப் பட்டியலில் அமைச்சா்கள் ஜி.ஆா்.அனில், ஜே.சிஞ்சுராணி, கே.ராஜன், பி.பிரசாத் ஆகியோா் வேட்பாளா்களாக அறிவிக்கப்பட்டுள்ளனா். அத்துடன் 5 பெண் வேட்பாளா்களும் இடம்பெற்றுள்ளனா்.
தொடர்புடையது

தொகுதி மறுசீரமைப்பு முயற்சியைக் கைவிட வேண்டும் - கேரள முதல்வா் வலியுறுத்தல்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 65 போ் போட்டி

திமுக, மாா்க்சிஸ்ட் வேட்பாளா்கள் பரஸ்பர தொகுதி மாற்றம்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு: மாா்க்சிஸ்ட் உடன்பாட்டில் தொடா் இழுபறி
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


