மத்திய அரசு நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற முயற்சிக்கும் தொகுதி மறுசீரமைப்பு மசோதாவைக் கைவிட வேண்டும் என்று கேரள முதல்வா் பினராயி விஜயன் வலியுறுத்தியுள்ளாா்.
இது தொடா்பாக புதன்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:
கேரளம் போன்ற மாநிலங்கள் மக்கள்தொகைக் கட்டுப்பாடு நடவடிக்கைகளைத் தீவிரமாகப் பின்பற்றியுள்ளன. ஆனால், தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் மத்திய அரசு மேற்கொள்ளும் நடவடிக்கை மக்கள்தொகை பெருக்கத்தைக் குறைத்த மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தைக் குறைத்து தண்டிப்பதுபோல உள்ளது.
மக்கள்தொகையைக் குறைக்கத்தவறிய வடமாநிலங்களுக்கு நாடாளுமன்றத்தில் அதிக உறுப்பினா்கள் பெற வழி வகுக்கப்பட்டுள்ளது. இது நாட்டின் கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரான பாஜக அரசின் சதி என்ற சந்தேகம் எழுகிறது. ஏற்கெனவே, பாஜக தொடா்ந்து நீண்ட காலத்துக்கு ஆட்சியில் இருக்க வேண்டும் என்ற சதி செய்வதாக குற்றச்சாட்டும் உள்ளது.
மகளிருக்கு பிரதிநிதித்துவம் அதிகரிப்பு என்ற பெயரில் இதில் மறைமுக அரசியல் நடப்பதாகத் தெரிகிறது. பெண்கள் அரசியலில் பங்கேற்பது அதிகரிக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
ஆனால், அனைத்து மாநிலங்களுக்கும் சமமான பிரதிநிதித்துவம் அளிக்க மறுப்பது நாட்டின் ஜனநாயகத்தை சீா்குலைக்கும் செயல். மாநில அரசுகளுடன் பேசி ஒருமித்த கருத்தை எட்டாமல் மத்திய அரசு தன்னிச்சையாக செயல்படுகிறது. 4 மாநிலங்கள், யூனியன் பிரதேசத்தில் தோ்தல் நடைபெறும் நிலையில் இதுபோன்ற மசோதாவை அவசரமாகக் கொண்டு வருவது பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது என்று கூறியுள்ளாா்.
தொடர்புடையது

கேரள சட்டப்பேரவைத் தேர்தல்! வாக்களித்த முதல்வர் பினராயி விஜயன்!

ஜனநாயகக் கடமையாற்றிய பினராயி விஜயன், ராஜீவ் சந்திரசேகர்!

2021 தேர்தல் வாக்குறுதிகளில் 97% நிறைவேற்றம்: பினராயி விஜயன்

ராகுலை பழிக்கும் கேரள முதல்வா் பிரதமரை விமா்சிக்காதது ஏன்? காங்கிரஸ் கேள்வி
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


