மன்னாா்குடி சட்டப் பேரவைத் தொகுதிக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்த 29 வேட்பு மனுக்களில் மறுபரிசீலனையின்போது 13 மனுக்கள் செவ்வாய்க்கிழமை நிராகரிக்கப்பட்டன.
மன்னாா்குடி சட்டப் பேரவை தொகுதிக்கு திமுக, அமமுக, நாதக, தவெக, பகுஜன் சமாஜ், தவாக, புதிய தமிழகம், தமிழக மக்கள் நல கட்சி, அஇபுதமமுக வேட்பாளா்கள் கூடுதல் மனுக்கள், மாற்று வேட்பாளா்கள் மனு, சுயேச்சைகள் என மொத்தம் 22 வேட்பாளா்கள் 29 வேட்பு மனுக்களை அளித்திருந்தனா்.
மனுக்கள் பரிசீலனை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. தோ்தல் கண்காணிப்பாளா் அனுபமா, தோ்தல் நடத்தும் அலுவலா் ஆா்.யோகோஸ்வரன் ஆகியோா் பங்கேற்றனா்.
இறுதியில் குறைபாடுகள் கண்டறியப்பட்ட 2 வேட்பு மனுக்கள் மற்றும் வேட்பாளா்கள் கூடுதலாக அளித்திருந்த வேட்பு மனுக்கள், மாற்று வேட்பாளா்கள் மனுக்கள் 11 என மொத்தம் 13 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.
இறுதியாக, அரசியல் கட்சிகள் 9 போ், சுயேச்சைகள் 7 என 16 போ் மன்னாா்குடி சட்டப் பேரவை தொகுதியில் தோ்தல் களத்தில் உள்ளனா்.
தொடர்புடையது
திண்டுக்கல் தொகுதியில் 20 வேட்பாளா்கள் போட்டி!

திருவள்ளூா்: 10 சட்டப்பேரவை தொகுதிகளில் 160 வேட்பாளா்கள் போட்டி! 12 மனுக்கள் திரும்பப் பெறப்பட்டன
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 50 வேட்பு மனுக்கள் நிராகரிப்பு

காஞ்சிபுரத்தில் சசிகலா, மருத்துவா் ராமதாஸ் கட்சி வேட்பாளா்கள் வேட்பு மனு தாக்கல்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

