குஜராத்தைத் தலைமையிடமாகக் கொண்ட மருத்துவ தொழில்நுட்பமான நிறுவனமான மெரில், வபி நகரில் உள்ள நிறுவன வளாகத்தில் முதியோர்களுக்கான ஒரு சுகாதார முன்னெடுப்பை மேற்கொண்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனி கலந்துகொண்டார்.
இதுதொடர்பாக, மெரில் நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
மெரில் நிறுவனத்தின் தலைமையகம் அமைந்துள்ள வபி வளாகத்திற்கு இந்திய கிரிக்கெட் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனி பங்கேற்று "குழந்தைத்தனம் ஓய்வு பெறக் கூடாது" என்ற கருத்தை மையமாகக் கொண்ட நிகழ்வில் பேசினார்.
நிறுவனத்தின் இந்த முயற்சி, முதியோர்களுக்கு தாமதமின்றி நோயறிதல் மற்றும் மேம்பட்ட சிகிச்சைகளுக்கான அணுகலை வலுப்படுத்தும் நோக்கமாகும்.
'குழந்தைத்தனம் ஓய்வு பெறக்கூடாது' என்ற இந்த முயற்சி, மூத்த குடிமக்களின் சுகாதாரத்தை மையமாகக் கொண்ட ஒரு தனிப்பட்ட திட்டமாக அறிமுகப்படுத்தப்படுகிறது. இதன் மூலம் ஆரம்ப கட்ட நோயறிதல், முன்னெச்சரிக்கை பரிசோதனைகள், புதுமையான சிகிச்சை முறைகளுக்கான அணுகல் ஆகியவை குறிப்பாக இதய நோய்கள், எலும்பு சார்ந்த பிரச்னைகள் மற்றும் வயதுடன் தொடர்புடைய பிற உடல்நலக் கோளாறுகளில் சிறந்த ஆதரவை வழங்க முடியும் என்பதைக் கூறுகிறது. முதியோர்களின் மகிழ்ச்சி, ஆர்வம், அவர்களிடையே உள்ள குழந்தைத்தனம், உற்சாகம் குறையக்கூடாது என்பதை வலியுறுத்துகிறது.
நிகழ்வில் எம்.எஸ். தோனி கூறியதாவது: உங்கள் உடல்நலத்தைப் பாதுகாப்பது நீங்கள் செய்யக்கூடிய மிக முக்கியமான விஷயங்களில் ஒன்று. உங்களுக்காகவும், உங்களை நேசிக்கும் குடும்பத்தினருக்காகவும் உங்கள் உடல்நலத்தில் கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக இளைஞர்கள், தங்கள் பெற்றோர், தாத்தா-பாட்டி ஆகியோர் மீது கவனம் செலுத்துவதுடன் அவர்களின் உடல்நலப் பிரச்னைகளுக்கு சிகிச்சை பெற, நீங்கள் பொறுப்பெடுத்துக்கொள்ள வேண்டும். 'முதியோர்களுக்கு சிகிச்சை அவசியம்' என்பது முக்கியமாகும். அதில் நான் ஒரு பகுதியாக இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்று தெரிவித்தார்.
இந்தியாவில் முதியவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், ஆரோக்கியமான, மரியாதையான முதிய வயதைப் பற்றிய உரையாடல்கள் மிகவும் முக்கியமானதாக மாறியுள்ளது. இந்த முயற்சியில் அனைத்து குடும்பங்களும் பங்கேற்று தங்கள் தாத்தா-பாட்டிகளுடன் எடுத்த வீடியோக்கள், முக்கிய தருணங்கள் அல்லது உணர்ச்சிமிக்க பதிவுகளை பகிர்ந்து, மூத்த குடிமக்களின் ஆரோக்கியம், மரியாதை, பாசத்தைக் கொண்டாடும் ஒரு தேசிய இயக்கமாக இதை மாற்ற முடியும் என்றும் மெரில் நிறுவனம் தெரிவித்துள்ளது.
Summary
childhood Shouldn't Retire: A National Call to Redefine Aging with Joy, Dignity and Preventive Care
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தில்லிக்கு எதிரான போட்டியில் தோனி இல்லை; பிரெவிஸ் பங்கேற்க வாய்ப்பு!

சிஎஸ்கேவின் 99% வெற்றிகளுக்குக் காரணம் எம்.எஸ். தோனி: அஸ்வின்

ஐபிஎல் 2026: எம்.எஸ். தோனி 2 வாரங்கள் விளையாட மாட்டார்!

எம்.எஸ். தோனி மான்செஸ்டர் யுனைடெட்டின் மிகப்பெரிய ரசிகர்..! சாம் பில்லிங்ஸ் பேட்டி!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


