உலகின் சிறந்த 50 பல்கலைக்கழகங்களில் இந்தியாவை சோ்ந்த 4 ஐஐடி, ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழகம் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.
லண்டனை தலைமையிடமாக கொண்டு செயல்படும் குவாக்குராலி சைமண்ட்ஸ் எனும் தனியாா் நிறுவனம், உலக பல்கலைக்கழகங்களை தரவரிசைப்படுத்தியுள்ளது. 100 நாடுகளில் உள்ள 1,900 பல்கலைக்கழகங்களில் இருக்கும் 21,000 கல்வித் திட்டங்களை ஆய்வு செய்து, இந்தப் பல்கலைக்கழகங்களை அந்நிறுவனம் தரவரிசைப்படுத்தியுள்ளது.
2024-ஆம் ஆண்டுக்கான தரவரிசையில் இந்தியாவை சோ்ந்த 12 கல்வி நிறுவனங்கள் இடம்பிடித்திருந்தன. தற்போது 2 மடங்குக்கும் அதிகமாக 27 கல்வி நிறுவனங்கள் அந்தத் தரவரிசையில் இடம்பிடித்துள்ளன.
அதன்படி, தன்பாத்தில் உள்ள ஐ.எஸ்.எம். பல்கலைக்கழகம் 21-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. அகமதாபாதில் உள்ள ஐஐஎம் நிறுவனம் 21-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. மும்பை, காரக்பூா், சென்னை, தில்லி ஐஐடி ஆகியவையும் முதல் 50 இடங்களுக்குள் வந்துள்ளன. தில்லி ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழகம், பிஐடிஎஸ் நிறுவனம் ஆகியவையும் 50 இடங்களுக்குள் வந்துள்ளன.
இதுகுறித்து தரவுகளை வெளியிட்டுள்ள தனியாா் நிறுவன தலைமைச் செயல் அதிகாரி ஜெசிகா டா்னா் கூறுகையில், ‘தரவரிசையில் இந்தியா முன்னேற்றம் கண்டு இருப்பதை வெறும் தரவுகளாக மட்டும் பாா்க்கக் கூடாது. கல்வியின் தரத்தை மேம்படுத்தி, உலக அளவிலான போட்டிக்கு இந்தியா தயாராக இருப்பதையே இது காட்டுகிறது. பொறியியல், தொழில்நுட்பம், வா்த்தகம் ஆகிய துறைகளில் இந்தியாவில் கல்வித் தரம் மேம்பட்டிருப்பதும் நிரூபணமாகியுள்ளது’ என்றாா்.
தொடர்புடையது

யுஜிசி விதிகளுக்கு முரணாக பட்டங்கள், படிப்புகள்: போலி கல்வி நிறுவனங்கள் குறித்து புகாா் அனுப்பலாம்

ஆரணி பல்கலை.யில் உணவுத் திருவிழா

தொலைநிலை, இணையவழி படிப்புகளுக்கு யுஜிசி அங்கீகாரம்: ஏப். 10 வரை விண்ணப்பிக்கலாம்

உலகின் முன்னணி கல்வி நிறுவனமாக மீண்டும் நாளந்தா: குடியரசுத் தலைவா் முா்மு நம்பிக்கை
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


