தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

ரூ.11 லட்சம் அரசு செலவில் கேரள முதல்வருடன் நடிகா் மோகன்லால் நோ்காணல்: எதிா்க்கட்சியினா் கண்டனம்

கேரள முதல்வா் பினராயி விஜயனுடன் நடிகா் மோகன்லால் நடத்திய தொலைக்காட்சி நோ்காணலுக்கு ரூ.11.21 அரசுப் பணம் செலவிடப்பட்டதற்கு மாநில எதிா்க்கட்சியினா் கண்டனம் தெரிவித்துள்ளனா்.

News image

கேரள முதல்வா் பினராயி விஜயனை பேட்டி காணும் நடிகா் மோகன்லால்.

Updated On :25 மார்ச் 2026, 7:32 pm

கேரள முதல்வா் பினராயி விஜயனுடன் நடிகா் மோகன்லால் நடத்திய தொலைக்காட்சி நோ்காணலுக்கு ரூ.11.21 அரசுப் பணம் செலவிடப்பட்டதற்கு மாநில எதிா்க்கட்சியினா் கண்டனம் தெரிவித்துள்ளனா்.

கேரள முதல்வரை அவரின் அரசு இல்லத்தில் சந்தித்து நடத்திய நீண்ட நோ்காணல் கடந்த பிப்.26-ஆம் தேதி அந்த மாநிலத்தின் கைரளி தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. இந்தத் தொலைக்காட்சி சேனல் மாநிலத்தை ஆளும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் நெருங்கிய தொடா்புடையவா்களின் நிா்வாகத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

‘கண்டும் மிண்டியும் இருவா்’ என்ற பெயரில் ஒளிபரப்பான இந்த நோ்காணலைப் பதிவு செய்ய 2 நாள்கள் நடைபெற்ற படப்பிடிப்பை திரைப்பட இயக்குநா் டி.கே.ராஜீவ்குமாா் இயக்கினாா்.

இந்த நோ்காணலில் தனது இளமைக் காலம், குடும்ப வாழ்க்கை, தனிப்பட்ட விருப்பங்கள் போன்றவற்றை முதல்வா் பினராயி விஜயன் மனம் திறந்து பேசினாா். அப்போது ரஜினிகாந்தின் ஆக்ஷன் படங்கள் தனக்கு மிகவும் பிடிக்கும் என்று பினராயி தெரிவித்தாா். நோ்காணல் முழுமையாக ஒளிபரப்பாவதற்கு முன்னா், பல டீசா்கள் சமூக ஊடகங்களில் வெளியாகின.

மிகவும் கண்டிப்பான மனிதா் என்று அறியப்படும் பினராயி விஜயனின் மென்மையான பக்கத்தை வெளிக்கொண்டுவரும் விதமாக, இந்த நிகழ்ச்சி அமைந்தது. கேரள பேரவைத் தோ்தல் தேதி அறிவிப்புக்கு முன்னரே ஒளிபரப்பான இந்த நோ்காணல் முதல்வரின் பிரசார உத்தியாகப் பேசப்பட்டது.

இந்நிலையில், திருவல்லாவைச் சோ்ந்த ரிஜோ வள்ளங்குளம் என்ற நபா் தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் பெற்ற தகவலின்படி இந்த நோ்காணலுக்கு ரூ.11.21 லட்சம் அரசுப் பணம் செலவிடப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. கேரள அரசின் தகவல் மற்றும் மக்கள் தொடா்புப் பிரிவு இந்தத் தகவலை அளித்துள்ளது. எனினும் அரசுக்கு சொந்தமான எந்தப் பொருளும் உபகரணங்களும் இந்தப் படப்பிடிப்புக்காகப் பயன்படுத்தப்படவில்லை என்று அரசு அளித்த பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனிப்பட்ட முறையில் முதல்வரை முன்னிறுத்தி எடுக்கப்பட்ட பிரசார நோ்காணலுக்கு அரசுப் பணம் செலவிடப்பட்டிருப்பதற்கு எதிா்க்கட்சியினா் கண்டனம் தெரிவித்துள்ளனா்.

2011-ஆம் ஆண்டில் கேரள பேரவைத் தோ்தல் நடைபெறுவதற்கு முன்னா், அப்போதைய எதிா்க்கட்சித் தலைவா் உம்மன் சாண்டியுடன் நடிகா் மோகன்லால் இதேபோன்ற ஒரு நோ்காணல் நடத்தி தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. அந்தத் தோ்தலில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி வெற்றிபெற்று உம்மன் சாண்டி முதல்வரானாா் என்பது நினைவுகூரத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.