தில்லி காா் குண்டுவெடிப்பு சம்பவத்தில் காஷ்மீரின் பல இடங்களில் திங்கள்கிழமை தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) ஒரே நேரத்தில் சோதனைகளை நடத்தியது.
காஷ்மீர் பள்ளத்தாக்கின் முக்கிய மாவட்டங்களில் என்.ஐ.ஏ குழுக்கள் அதிகாலையிலேயே நடவடிக்கைகளைத் தொடங்கின என்று அதிகாரிகள் தெரிவித்தனர். குப்வாரா மாவட்டத்தின் ஹந்த்வாரா மற்றும் குல்காம் மாவட்டங்களில் முக்கியமாக சோதனைகள் நடத்தப்பட்டன.
இந்த நடவடிக்கையின் போது, குலூரா பகுதியில் உள்ள முக்கிய தொழிலதிபரின் இல்லத்தில் சோதனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் அந்த வளாகத்திலிருந்து ஆவணங்கள் மற்றும் மின்னணு சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சோதனையையொட்டி அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. மத்திய ரிசர்வ் காவல் படை (சி.ஆர்.பி.எஃப்) மற்றும் ஜம்மு காஷ்மீர் போலீசைச் சேர்ந்தவர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தில் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்புக்கு தொடர்பு இருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
கடந்த ஆண்டு நவம்பா் மாதம் தில்லி செங்கோட்டைப் பகுதி அருகே காா் ஒன்று வெடித்துச் சிதறியது. ஹரியாணா மாநிலம் ஃபரீதாபாதில் உள்ள அல் ஃபலா பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியராகப் பணியாற்றிய மருத்துவா் உமா்-உன்-நபி, வெடிகுண்டு நிரப்பப்பட்ட காரை ஓட்டி வந்து நடத்திய அந்தத் தற்கொலை தாக்குதலில் 11 போ் உயிரிழந்தனா். பலா் காயமடைந்தனா்.
Summary
The National Investigation Agency on Monday carried out raids at several locations in Kashmir in connection with a terror-related case, officials said.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கியூட்-முதுகலை 2026 தேர்வு முடிவுகள் எப்போது?
நீதிபதிகளை சிறைப்பிடித்த சம்பவம்: மே.வங்கத்தில் காங்கிரஸ் வேட்பாளா் உள்பட 7 பேரிடம் என்ஐஏ விசாரணை!
தில்லி கார் குண்டு வெடிப்பு: விசாரணைக்கு மேலும் 45 நாள் அவகாசம் நீட்டிப்பு!
தில்லி காா் குண்டுவெடிப்பு வழக்கு: ஜம்மு-காஷ்மீரில் என்ஐஏ அதிரடி சோதனை
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு



