தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

கேரள எதிர்க்கட்சித் தலைவர் சாலைவலமாக சென்று வேட்புமனுத் தாக்கல்!

கேரள எதிர்க்கட்சித் தலைவர் வேட்புமனுத் தாக்கல்...

News image

வி.டி. சதீஷன் - X | V D Satheesan

Updated On :23 மார்ச் 2026, 6:36 am

கேரள எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான வி.டி. சதீஷன் சாலைவலமாகச் சென்று வேட்புமனுவை திங்கள்கிழமை தாக்கல் செய்தார்.

கேரள சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகின்ற ஏப்ரல் 9 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் போட்டியிடுவோர் வேட்புமனுத் தாக்கல் செய்ய இன்று கடைசி நாளாகும்.

ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடது ஜனநாயக முன்னணிக்கும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கும், பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும் இடையே மும்முனைப் போட்டி நிலவி வருகின்றது.

வேட்புமனுத் தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் என்பதால், அனைத்துக் கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்களும் வேட்புமனுத் தாக்கல் செய்யும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில், எர்ணாகுளம் மாவட்டம், பரவூர் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் எதிர்க்கட்சித் தலைவர் வி.டி. சதீஷன், தொண்டர்களுடன் சாலைவலமாகச் சென்று வேட்புமனுவை இன்று காலை தாக்கல் செய்துள்ளார்.

Summary

Kerala Opposition Leader VD Satheesan files nomination

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.