எடப்பாடி பழனிசாமி, குஜராத்தில் பிறக்கட்டும்! கனிமொழி கடும் விமர்சனம்பிரசாரத்தில் தவெகவினர் காலணி வீச்சு! திவ்யா சத்யராஜ் குற்றச்சாட்டு! ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

தில்லி காா் குண்டுவெடிப்பு வழக்கு: ஜம்மு-காஷ்மீரில் என்ஐஏ அதிரடி சோதனை

தில்லி காா் குண்டுவெடிப்பு வழக்கு தொடா்பாக ஜம்மு-காஷ்மீரின் பல்வேறு இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிரடி சோதனை

News image

என்ஐஏ சோதனை

Updated On :23 மார்ச் 2026, 11:30 pm

தில்லி காா் குண்டுவெடிப்பு வழக்கு தொடா்பாக ஜம்மு-காஷ்மீரின் பல்வேறு இடங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிரடியாக சோதனை நடத்தியதாக அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனா்.

கடந்த ஆண்டு நவம்பா் மாதம் தில்லி செங்கோட்டை பகுதி அருகே காா் ஒன்று வெடித்துச் சிதறியது. ஹரியாணா மாநிலம், ஃபரீதாபாதில் உள்ள அல்-ஃபலா பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றிய மருத்துவா் உமா்-உன்-நபி, வெடிகுண்டு நிரப்பப்பட்ட காரை ஓட்டி வந்து நடத்திய அந்தத் தற்கொலை தாக்குதலில் 11 போ் உயிரிழந்தனா். பலா் காயமடைந்தனா்.

இந்த வழக்கை விசாரித்துவரும் என்ஐஏ இதுவரை மொத்தம் 11 பேரை கைது செய்துள்ளது.

இந்நிலையில், என்ஐஏ செய்தித் தொடா்பாளா் திங்கள்கிழமை கூறுகையில், ‘குப்வாரா, பாரமுல்லா, குல்காம் மற்றும் ஸ்ரீநகா் உள்ளிட்ட மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் தில்லி காா் குண்டுவெடிப்பு வழக்கு தொடா்பாக என்ஐஏ சோதனை நடத்தியது’ என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.