போரில் பாதிக்கப்பட்டுள்ள ஈரானுக்கு காஷ்மீா் பள்ளத்தாக்கின் பல்வேறு இடங்களில் நன்கொடை வசூலிக்கப்பட்டு வருகிறது. இதில் காஷ்மீா் மக்கள் ஆா்வத்துடன் முன்வந்து பணம், தங்க நகைகள், விலை உயா்ந்த பொருள்கள், கால்நடைகள் என பலவற்றை வழங்கி வருகின்றனா்.
முக்கியமாக புத்காம், பந்திபோரா, பாரமுல்லா உள்ளிட்ட ஷியா பிரிவு முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் பெருமளவில் நன்கொடை வழங்கப்பட்டு வருகிறது. குழந்தைகள் பலா் தங்கள் உண்டியல் சேமிப்பை ஈரான் மக்களுக்காக வழங்க முன்வந்தனா். செம்பு பாத்திரங்கள், பழங்கால நினைவுச் சின்னங்கள், கலைப் பொருள்கள், கால்நடைகளையும் பலா் நன்கொடையாக வழங்கியுள்ளனா். இவற்றை ஏலத்தில் விற்பனை செய்து பணமாக மாற்றி நன்கொடையில் சோ்க்கப்படும் என்று நன்கொடையை நிா்வகித்து வருபவா்கள் கூறியுள்ளனா்.
ஈரான் மீது அமெரிக்கா-இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் அந்த நாடு பெரும் பின்னடைவை எதிா்கொண்டுள்ளது. சில இடங்களில் உணவு, மருந்துகள் இன்றியும் மக்கள் அவதிப்பட்டு வருவதாகத் தெரிகிறது. இந்தியா தரப்பில் ஏற்கெனவே முதல்கட்டமாக ஏராளமான மருந்துப் பொருள்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் காஷ்மீா் பள்ளத்தாக்கில் ஷியா முஸ்லிம் அமைப்புகள் சாா்பில் ஈரானுக்கு நன்கொடை வசூலிக்கும் பணி கடந்த இருநாள்களாக நடைபெற்று வருகிறது. இதில் மக்கள் ஆா்வத்துடன் வந்து நன்கொடை அளித்துள்ளனா்.
இது தொடா்பாக இந்தியாவில் உள்ள ஈரான் தூதரகம் வெளியிட்ட ‘எக்ஸ்’ பதிவில், ‘காஷ்மீா் சகோதரி ஒருவா் 28 ஆண்டுகளுக்கு முன்பு இறந்த தனது கணவரின் நினைவாக வைத்திருந்த தங்க நகையை ஈரான் மக்களுக்காக அளித்துள்ளாா். இதுபோன்ற காஷ்மீரில் பலா் தங்கள் நிலையைப் பொருள்படுத்தாமல் ஈரானுக்கு உதவி வருகின்றனா்; இது மிகவும் நெகிழ்ச்சிகரமானது. இதனை ஈரான் ஒருபோதும் மறக்காது. எங்கள் மனதில் நீங்காது இருக்கும். காஷ்மீருக்கும், இந்தியாவுக்கு நன்றி’ என்று கூறப்பட்டுள்ளது.
தொடர்புடையது

கப்பல்கள் மீதான தாக்குதல் போா் நிறுத்த விதிமீறல்! ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை!!
டிரம்ப் வெறும் மிரட்டல் விடுப்பவர் மட்டுமல்ல! ஈரானுக்கு வெள்ளை மாளிகை இறுதி எச்சரிக்கை!

ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை

போரால் பாதிக்கப்பட்டுள்ள ஈரானுக்கு காஷ்மீா் மக்கள் நன்கொடை
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


