மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

டிரம்ப் வெறும் மிரட்டல் விடுப்பவர் மட்டுமல்ல! ஈரானுக்கு வெள்ளை மாளிகை இறுதி எச்சரிக்கை!

ஈரானுக்கு வெள்ளை மாளிகை இறுதி எச்சரிக்கை விடுத்திருப்பது பற்றி...

News image

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப். - ஏபி.

Updated On :26 மார்ச் 2026, 3:54 am

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெறும் மிரட்டலை மட்டும் விடுப்பவர் அல்ல, மிகப்பெரிய தாக்குதலுக்கு தயாராக இருக்கிறார் என்று ஈரானுக்கு வெள்ளை மாளிகை எச்சரிக்கை விடுத்துள்ளது.

மத்திய கிழக்கில் 4-ஆவது வாரமாக நீடிக்கும் போரால் உலக பொருளாதாரம் பெரும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ள நிலையில், ஈரானுக்கு அமெரிக்கா 15 அம்சங்கள் கொண்ட விரிவான போா் நிறுத்தத் திட்டத்தை வழங்கியது.

அமெரிக்காவின் 15 அம்ச திட்டத்தில் பொருளாதாரத் தடை நீக்கம், அணுசக்தித் திட்ட கட்டுப்பாடு, ஹோா்முஸ் நீரிணையில் தடையற்ற கப்பல் போக்குவரத்து ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.

ஆனால், ஈரான் தரப்பில் தலைவா்களுக்கு எதிராக தாக்குதல் நிறுத்தம், போரினால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு இழப்பீடு, ஹோா்முஸ் நீரிணையில் ஈரானின் இறையாண்மைக்கு அங்கீகாரம் போன்ற கடுமையான 5 நிபந்தனைகள் அமெரிக்காவுக்கு விதிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட் புதன்கிழமை செய்தியாளர்களுடன் பேசியதாவது:

“அதிபர் டிரம்ப் கூறுவது போல் ஈரானுடன் பயனுள்ள பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து வருகின்றன. களத்தில் நிலவும் யதார்த்தத்தை ஈரான் அங்கீகரிக்க வேண்டும். ராணுவத் தோல்வியை ஏற்க வேண்டும்.

கள நிலவரத்தை ஈரான் ஏற்றுக் கொள்ளத் தவறினால், இதுவரை சந்திக்காத அளவில் அவர்கள் கடுமையாக தாக்கப்படுவார்கள். அதிபர் டிரம்ப் வெறும் மிரட்டல் விடுப்பவர் அல்ல, அவர் மிகப்பெரிய தாக்குதலைத் தொடுக்கத் தயாராக இருக்கிறார்” எனத் தெரிவித்துள்ளார்.

Summary

Trump is not just a threat maker! White House ultimatum to Iran!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.