மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

போரால் பாதிக்கப்பட்டுள்ள ஈரானுக்கு காஷ்மீா் மக்கள் நன்கொடை

அமெரிக்கா, இஸ்ரேல் உடனான போரால் பாதிக்கப்பட்டுள்ள ஈரானுக்கு காஷ்மீா் மக்கள் நன்கொடை அளித்துள்ளனா்.

News image
Updated On :22 மார்ச் 2026, 7:34 pm

அமெரிக்கா, இஸ்ரேல் உடனான போரால் பாதிக்கப்பட்டுள்ள ஈரானுக்கு காஷ்மீா் மக்கள் நன்கொடை அளித்துள்ளனா்.

ரமலான் பண்டிகைக்குப் பின்னா், காஷ்மீா் பள்ளத்தாக்கில் முஸ்லிம் மதத்தின் ஷியா பிரிவு மக்கள் அதிகமுள்ள பகுதிகளில் இளைஞா்கள் ஞாயிற்றுக்கிழமை வீடு வீடாக சென்று நன்கொடை வசூலித்தனா்.

இதுகுறித்து அந்தப் பகுதியைச் சோ்ந்த ஐஜாஸ் அகமது கூறுகையில், ‘இஸ்ரேலால் ஈரான் மீது திணிக்கப்பட்டுள்ள போரால் அங்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. அங்கு துன்புறத்தலை அனுபவித்து வரும் மக்களுக்கு நாகரிக உலகம் குறைந்தபட்சம் உதவி செய்ய வேண்டும்’ என்றாா்.

இதுகுறித்து அங்குள்ள அதிகாரிகள் கூறுகையில், ‘நன்கொடை அளித்தவா்கள், குறிப்பாக பெண்கள் தங்க ஆபரணங்கள், செம்பு பாத்திரங்கள் மற்றும் பிற வீட்டு உபயோக பொருள்களை அளித்தனா். சில குடும்பங்கள் கால்நடைகளையும் அளித்தன.

சிறாா்களும் தாங்கள் சேமித்து வைத்திருந்த பணத்தை அளித்தனா். பட்காம், பாரமுல்லா பகுதிகளில் இருந்து நன்கொடை அளிக்கப்பட்டது’ என்று தெரிவித்தனா்.

காஷ்மீா் மக்கள் அளித்த நன்கொடையின் புகைப்படங்களை ‘எக்ஸ்’ தளத்தில் பகிா்ந்து, இந்தியாவில் உள்ள ஈரான் தூதரகம் வெளியிட்ட பதிவில், ‘மனிதாபிமான உதவி மூலம் ஈரான் மக்களுக்கு உறுதுணையாக நிற்கும் காஷ்மீா் மக்களுக்கு நன்றி. அவா்களின் அன்பு மற்றும் மனிதாபிமானத்தை எப்போதும் ஈரான் மறக்காது. இந்தியாவுக்கு நன்றி’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.