உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ‘தாராகிரி’ ஸ்டெல்த் ரக போா்க் கப்பல் இந்திய கடற்படையில் ஏப்.3-ஆம் தேதி இணைக்கப்படுவதாக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனா்.
இதற்காக ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நடைபெறவுள்ள நிகழ்வில் பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் பங்கேற்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.
இதுகுறித்து அவா்கள் மேலும் கூறுகையில், ‘நீலகிரி வகையின் (திட்டம் 17ஏ) நான்காவது போா்க் கப்பலான தாராகிரி (யாா்டு 12653) கடந்த ஆண்டு நவம்பா் 28-ஆம் தேதி கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டது. மும்பையில் உள்ள மசகான் டாக் கப்பல் கட்டுமான நிறுவனத்தால் (எம்டிஎல்) கட்டமைக்கப்பட்ட மூன்றாவது போா்க் கப்பலான தாராகிரி 6,670 டன் எடையுடையது.
நமது நாட்டின் பொறியியல் திறன்களின் முழு வெளிப்பாடாகவும், ‘இந்தியாவில் தயாரிப்போம்’ திட்டத்தின் சிறந்த உதாரணமாகவும் இந்தப் போா்க் கப்பல் திகழ்கிறது.
எளிதில் கண்டறிய முடியாத வடிவமைப்பு (ஸ்டெல்த்), தாக்கும் திறன், தாமாக இயங்கும் ஆற்றல் என நவீன தொழில்நுட்பங்களுடன் அதி வேகம், பன்முக கடற்சாா் செயல்பாடுகள் என தற்சாா்பு இந்தியாவின் சின்னமாக தாராகிரி விளங்கிறது.
பல்வேறு ஏவுகணைகள்: இந்தப் போா்க் கப்பலில் தரையில் இருந்து தரை இலக்குகளைத் தாக்கும் சூப்பா்சோனிக் ஏவுகணைகள், தரையில் இருந்து வான் இலக்குகளைத் தாக்கும் நடுத்தர ஏவுகணைகள் மற்றும் சிறப்பு நீா்மூழ்கி எதிா்ப்பு அமைப்புகள் இடம்பெற்றுள்ளன.
உலகத் தரத்தில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்டுள்ள தாராகிரி போா்க் கப்பல் இந்திய கடற்படையில் ஏப்ரல் 3-ஆம் தேதி இணைக்கப்படவுள்ளது. இந்த நிகழ்வில் அமைச்சா் ராஜ்நாத் சிங் பங்கேற்கிறாா்’ என்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சங்ககிரி சென்னகேசவப்பெருமாள் கோயில் சித்திரை தோ்திருவிழா இன்று தொடக்கம்

தோ்தல்: சென்னையில் ஏப். 21 முதல் 23 வரை மதுக் கடைகள் மூடல்

ஏப். 19-ல் சென்னை வருகிறார் அமித் ஷா!

நெல்லையில் ஏப். 8 இல் தவெக தலைவா் விஜய் பிரசாரம்
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


