கேரள மாநிலத்தில் வரும் ஏப். 9 ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், மார்ச் 25 ஆம் தேதி முதல் பிரசாரத்தை தொடங்குகிறார் காங்கிரஸ் தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி.
அசாம், கேரளம் ஆகிய மாநிலங்களுக்கும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்கு ஏப்ரல் 9 ஆம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.
வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் நாளை(மார்ச் 23) என்பதால், அதற்கான பணிகள் விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது.
முன்னதாக, 55 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டிருந்த நிலையில், 37 வேட்பாளர்கள் பட்டியலை இரண்டாம் கட்டமாக அண்மையில் வெளியிட்டது.
இத்துடன் ஐக்கிய ஜனநாயக முன்னணியில் (யுடிஎஃப்) தாங்கள் போட்டியிடும் 92 தொகுதிகளுக்கான வேட்பாளர்களின் பெயர்களையும் காங்கிரஸ் அறிவித்தது.
இந்த நிலையில், கேரள சட்டப் பேரவைத் தேர்தலுக்கான பிரசாரத்தை காங்கிரஸ் தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி மார்ச் 25 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளார். அதற்கான ஏற்பாடுகளை காங்கிரஸ் நிர்வாகிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
140 பேரவைத் தொகுதிகளைக் கொண்ட கேரளத்துக்கு ஏப். 9-ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட்டு மே 4-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
Summary
Congress president and Leader of Opposition in the Lok Sabha Rahul Gandhi will start campaigning from March 25 for the upcoming assembly elections in Kerala, which will be held on April 9.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சிறுபான்மையினரைத் தாக்குவோருடன் பினராயி விஜயனுக்கு தொடா்பு: கேரளத்தில் ராகுல் காந்தி பிரசாரம்

தேர்தல் பிரசாரம்: ஏப். 6-ல் புதுவை வரும் ராகுல் காந்தி!

மருத்துவமனையில் சோனியா... ராகுல் காந்தியின் கேரள பிரசாரம் ஒத்திவைப்பு!

கேரள மக்கள் மாற்றத்துக்கு தயாராகிவிட்டனா்: ராகுல் காந்தி நம்பிக்கை
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



