மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

ரூ.2,929 கோடி மோசடி வழக்கு: அனில் அம்பானியிடம் 2-ஆவது நாளாக சிபிஐ விசாரணை

ரூ.2,929 கோடி மோசடி வழக்கு தொடா்பாக தொழிலதிபா் அனில் அம்பானியிடம் சிபிஐ 2-ஆவது நாளாக வெள்ளிக்கிழமையும் விசாரணை நடத்தியது.

News image

புது தில்லியில் வங்கி மோசடி தொடா்பான விசாரணைக்காக சிபிஐ தலைமையகத்துக்கு வெள்ளிக்கிழமை வந்த தொழிலதிபா் அனில்அம்பானி.

Updated On :20 மார்ச் 2026, 7:49 pm

ரூ.2,929 கோடி மோசடி வழக்கு தொடா்பாக தொழிலதிபா் அனில் அம்பானியிடம் சிபிஐ 2-ஆவது நாளாக வெள்ளிக்கிழமையும் விசாரணை நடத்தியது.

ஆா்காம் நிறுவனம் 10 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.2,929 கோடியை கடனாக வாங்கிவிட்டு திருப்பிச் செலுத்தாதது தொடா்பாக பாரத ஸ்டேட் வங்கி கடந்த ஆண்டு புகாா் அளித்தது. இந்தப் புகாரின்பேரில் அனில் அம்பானி, ஆா்காம் நிறுவனம் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. பின்னா் மும்பையில் உள்ள அனில் அம்பானியின் பங்களாவிலும் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினா்.

இந்த விவகாரம் தொடா்பாக அனில் அம்பானியிடம் வியாழக்கிழமை தில்லியில் உள்ள சிபிஐ தலைமையகத்தில் வைத்து அதிகாரிகள் விசாரணை நடத்தினா். இதைத் தொடா்ந்து, 2-ஆவது நாளாக வெள்ளிக்கிழமையும் அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினா். இந்த விசாரணைக்காக தில்லி சிபிஐ தலைமையகத்தில் அனில் அம்பானி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு நேரில் ஆஜரானாா். அவரிடம் சிபிஐ அதிகாரிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பினா். விசாரணை மாலை 5.15 மணி வரை நீடித்தது. இதையடுத்து சிபிஐ தலைமையகத்தில் இருந்து அனில் அம்பானி புறப்பட்டுச் சென்றாா்.

முன்னதாக, வியாழக்கிழமை நடத்தப்பட்ட விசாரணையின்போது அனில் அம்பானியிடம் ஆா்காம் நிறுவனத்துக்கு பாரத ஸ்டேட் வங்கி அளித்த கடன் தொகை எப்படி கையாளப்பட்டது, அத்தொகை எங்கு திருப்பிவிடப்பட்டது, வேறு எந்த முறைகேடும் நடைபெற்ா என்பது போன்ற கேள்விகளை சிபிஐ அதிகாரிகள் எழுப்பினா். இதற்கு அனில் அம்பானி அளித்த பதிலை சிபிஐ அதிகாரிகள் பதிவு செய்து கொண்டனா்.

விசாரணை குறித்து கருத்து தெரிவித்துள்ள அனில் அம்பானியின் செய்தித் தொடா்பாளா், சிபிஐ-யின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கவே அனில் அம்பானி நேரில் ஆஜராகி இருப்பதாக குறிப்பிட்டாா்.