இந்துக்களும் முஸ்லிம்களும் இணைந்து வாழ முடியாது என துரந்தர் படத்தின் மூலம் பாஜக கூற முயற்சிப்பதாக காங்கிரஸ் எம்.பி. தாரிக் அன்வர் குற்றம் சாட்டியுள்ளார்.
தில்லியில் செய்தியாளருடன் காங்கிரஸ் எம்.பி. தாரிக் அன்வர் பேசுகையில், "துரந்தர் 2 படத்தைத் தயாரித்தவர்கள் கண்டிப்பாக வெறுப்பைப் பரப்புபவர்கள்தான் என்பது தெளிவாகிறது. அவர்கள் நாடு முழுவதும் வெறுப்பைப் பரப்புவதற்கான ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளனர்.
படத்தில் காட்டப்பட்டுள்ள வன்முறையின் மூலம் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினருக்கு எதிரான ஒரு சூழ்நிலையை உருவாக்க முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. இதனை ஊக்குவிக்கவே துரந்தர் படம் உருவாக்கப்பட்டுள்ளது. இதுதான் பாஜகவின் செயல்திட்டமும்கூட.
இதனைச் செய்தவர்கள் பாஜகவும் ஆர்எஸ்எஸும் தான். ஆனால், வருங்காலங்களில் இது இந்தியாவுக்கு ஒரு பெரிய பிரச்னையாக மாறும் என்பதை அவர்கள் அறியவில்லை.
அவர்களின் செயல்பாட்டால், பாகிஸ்தானுக்குத்தான் மிகவும் பயனளிக்கப் போகிறது. பாகிஸ்தான் சிற்பியான முகமது அலி ஜின்னா செய்ய முடியாததை, பாஜகவும் ஆர்எஸ்எஸும் இங்கு செய்து கொண்டிருக்கின்றனர்.
முஸ்லிம்களும் இந்துக்களும் இணைந்து வாழ முடியாது என்று ஜின்னா கூறுவார். பிரிவினையின்போது, பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் அங்கு சென்றனர்; இந்தியாவின் நலனை விரும்பியவர்கள் இங்கேயே தங்கினர்.
ஆனால், இந்துக்களும் முஸ்லிம்களும் இணைந்து வாழ முடியாது என்று கூறும் பாஜகவும் ஆர்எஸ்எஸும் பாகிஸ்தானின் கூற்றை உண்மையாக்க விரும்புகின்றனர்" என்று தெரிவித்தார்.
Summary
BJP's agenda is create an atmosphere against a particular community, says Congress MP Tariq Anwar
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இட ஒதுக்கீடு விவகாரத்தில் நாங்கள் பெண்களுக்கு எதிரானவா்கள்போல பிம்பத்தை உருவாக்க முயற்சி! தேஜஸ்வி யாதவ்

தொகுதி மறுசீரமைப்பு ஜனநாயகத்திற்கு எதிரான மறைமுக தாக்குதல்: செல்வப்பெருந்தகை

தமிழகத்தில் பதற்றத்தை உருவாக்க பாஜக முயற்சி: இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலா்

அஸ்ஸாமில் ஆட்சிக்கு வந்தால் 6 சமூகத்தினருக்கு எஸ்.டி. அந்தஸ்து: தோ்தல் அறிக்கையை வெளியிட்டாா் ராகுல்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

