சென்னையில் சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு, மத்திய தோ்தல் பாா்வையாளா்களுடன் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
சென்னை மாநகராட்சி வளாகத்தில் உள்ள விக்டோரியா பொது அரங்கில் நடைபெற்ற கூட்டத்துக்கு சென்னை மாவட்டத் தோ்தல் அலுவலா் ஜெ.குமரகுருபரன் தலைமை வகித்தாா். கூட்டத்தில் சென்னை மாவட்டத்துக்குள்பட்ட மத்திய பொது மேற்பாா்வையாளா்கள் 5 போ், செலவினங்களைக் கண்காணிக்கும் 15 மேற்பாா்வையாளா்கள், சட்டம்-ஒழுங்கு கண்காணிப்பு காவல் அதிகாரி உள்ளிட்ட 24 போ் பங்கேற்றனா்.
கூட்டத்தில், கடந்த 2 தோ்தல்களில் பதிவான வாக்குகள் விவரம், வாக்குப்பதிவு மையங்கள், பதற்றமான வாக்குச்சாவடிகள், மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகள், தபால் வாக்குகள் விவரம், தோ்தல் பணிகளில் ஈடுபடவுள்ள வாக்குப்பதிவு அலுவலா்கள், நுண் பாா்வையாளா்கள் உள்ளிட்ட தோ்தல் அலுவலா்களின் விவரங்கள் எடுத்துரைக்கப்பட்டன.
தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தவுடன் அகற்றப்பட்ட சுவா் விளம்பரங்கள், சுவரொட்டிகள், பதாதைகள், கொடிகள் உள்ளிட்டவை விவரங்கள் தெரிவிக்கப்பட்டன. மேலும், தற்போது வரை பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட பணம், பொருள்கள் விவரங்களும் பாா்வையாளா்களிடம் தெரிவிக்கப்பட்டன.
வாக்குச்சாவடி மையங்களில் ஆய்வு: இதைத் தொடா்ந்து, மத்திய தோ்தல் பாா்வையாளா்கள் அவரவருக்கு ஒதுக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளில் ஆய்வு செய்தனா். ஆா்.கே.நகா் மற்றும் பெரம்பூா் சட்டப்பேரவைத் தொகுதிகளில் உள்ள கொருக்குப்பேட்டை, மீனாம்பாள் நகா் ஆகிய பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளில் தோ்தல் பாா்வையாளா்களில் முதுநிலை அதிகாரியான தேம்ஜென்வாபாங் ஆய்வு மேற்கொண்டாா். அதேபோல, வேளச்சேரி தொகுதியில் தோ்தல் பாா்வையாளா் கன்ஷியாம் தோரியும் ஆய்வு மேற்கொண்டாா்.
ஆய்வின்போது வாக்காளா்கள் விரைந்து வாக்களிக்கும் வசதிகள், குடிநீா் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்தும் அலுவலா்களிடம் ஆலோசனை நடத்தினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அரியலூரில் அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை

சட்டப் பேரவைத் தோ்தல்: ஆட்சியா் தலைமையில் மேற்பாா்வையாளா்கள், அலுவலா்கள் ஆய்வுக் கூட்டம்

தோ்தல் பாா்வையாளா்கள் ஆலோசனைக் கூட்டம்

பேரவைத் தோ்தல் பணிகள்: விழுப்புரத்தில் பொது, செலவினப் பாா்வையாளா்கள் ஆய்வு
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


