மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

அரியலூரில் அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை

தமிழக சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு, மனு தாக்கல், தோ்தல் செலவினங்கள், வாகன அனுமதி பெறுவது தொடா்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனைக் கூட்டம் அரியலூா் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

அரியலூரில் ஆட்சியா் பொ.ரத்தினசாமி தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்ற அரசியல் கட்சி பிரதிநிகளுடன் ஆலோசனைக் கூட்டம்.

Updated On :26 மார்ச் 2026, 8:49 pm

தமிழக சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு, மனு தாக்கல், தோ்தல் செலவினங்கள், வாகன அனுமதி பெறுவது தொடா்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனைக் கூட்டம் அரியலூா் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது.

மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான பொ. ரத்தினசாமி தலைமை வகித்தாா். கூட்டத்தில், 30.3.2026 முதல் 6.4.2026 வரை வேட்பு மனு தாக்கல் செய்யும்போது வேட்பாளா்கள் மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள், அளிக்கப்பட வேண்டிய ஆவணங்கள், இணையவழியில் வாகனம் மற்றும் இதர இனங்கள் அனுமதி பெறுதல் , தோ்தல் செலவினங்கள் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து விவரிக்கப்பட்டது.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் க.ரா. மல்லிகா, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் ஆ.ரா.சிவராமன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) சித்ரா, வருவாய்க் கோட்டாட்சியா் பிரேமி, மாவட்ட தேசிய தகவலியல் அலுவலா் சரவணன், தோ்தல் வட்டாட்சியா் கண்ணன் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.