மேற்குவங்கத்தில் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்காததால் எம்எல்ஏ ஒருவர் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.
மேற்கு வங்கத்தில் இரு கட்டங்களாக ஏப். 23 மற்றும் ஏப். 29 ஆகிய தேதிகளில் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மே 4-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் மேற்கு வங்கத்தில் மொத்தமுள்ள 294 தொகுதிகளில் 291 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் முதல்வருமான மமதா பானர்ஜி நேற்று வெளியிட்டார். அதில், மீதமுள்ள மூன்று தொகுதிகள் கூட்டணிக் கட்சியான அனித் தாபாவின் பாரதிய கூர்கா பிரஜாதாந்திரிக் மோர்ச்சாவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. பவானிபூர் தொகுதியில் மமதா பானர்ஜி மீண்டும் போட்டியிடவுள்ளார்.
மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் தற்போது எம்எல்ஏவாக இருக்கும் 74 பேருக்கு மீண்டும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. இது கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் ஜல்பைகுரி மாவட்டம் ராஜ்கன்ச் தொகுதி எம்எல்ஏ ககேஸ்வர் ராய் தனது எம்எல்ஏ பதவியை இன்று ராஜிநாமா செய்துள்ளார்.
ராஜ்கன்ச் தொகுதியில் புதியதாக இந்திய தடகள வீராங்கனை ஸ்வப்னா பர்மனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
ராஜ்கன்ச் தொகுதியில் 3 முறை எம்எல்ஏவாக இருந்த ககேஸ்வர் ராய், வடக்கு மேற்குவங்கத்தில் கட்சியின் முக்கிய ஒருங்கிணைப்பாளராக உள்ளார். இந்நிலையில் தனக்கு வாய்ப்பு வழங்கப்படாததால் எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்ததுடன் ஜல்பைகுரி மாவட்டத் தலைவர் பொறுப்பில் இருந்தும் விலகியுள்ளார்.
மமதா பானர்ஜி திரிணமூல் காங்கிரஸ் கட்சியை தொடங்கியதில் இருந்து தான் அவருடன் பணிபுரிவதாகவும் ஆனால் இன்று பண அதிகாரத்தால் தான் தோற்கடிக்கப்பட்டதாகவும் கூறியுள்ளார்.
Summary
West Bengal elections: Upset TMC MLA resigns after athlete Swapna Barman gets ticket from Jalpaiguri
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திரிணமூல் காங்கிரஸை பெண்கள் தண்டிப்பா்: பிரதமா் மோடி

பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ், திரிணமூல்: பாடம் புகட்டப்படும் - மோடி
வாக்கு வங்கிக்காக மத அடிப்படையிலான இடஒதுக்கீடு: பிரதமர் மோடி குற்றச்சாட்டு
அதிரடி காட்டும் மமதா.. திரிணமூல் காங்கிரஸில் 74 எம்.எல்.ஏ-க்களுக்கு ‘சீட்’ இல்லை!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



