விமானங்களில் 60 சதவீத இருக்கைகளுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
உலகளவில் உள்நாட்டு விமானப் பயணிகளை கையாளுவதில் இந்தியா மூன்றாவது நாடாக இருக்கின்றது. இந்திய விமான நிலையங்கள் நாளொன்றுக்கு 5 லட்சம் பயணிகளை கையாண்டு வருகின்றன.
விமானங்களில் பயணம் செய்ய ஜன்னல் இருக்கைகள், முன்பக்க இருக்கைகள் போன்றவற்றை தேர்வு செய்வதற்கு விமான நிறுவனங்கள் கூடுதல் கட்டணங்களை வசூலித்து வருகின்றன.
இந்த நிலையில், அனைத்து விமானங்களிலும் 60 சதவீத இருக்கைகளை தேர்வு செய்வதற்கு எவ்வித கூடுதல் கட்டணமும் வசூலிக்கக் கூடாது என்று மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது.
மேலும், ஒன்றாக பயணச்சீட்டை முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் ஒன்றாக இருக்கைகளை ஒதுக்கீடு செய்யவும் விமான நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், “விளையாட்டு உபகரணங்கள் மற்றும் இசைக் கருவிகளை பாதுகாப்பாக எடுத்துச் செல்வதற்கு செயல்பாட்டு விதிமுறைகளுக்குட்பட்டு உகந்த வசதிகளை செய்து தரவேண்டும். செல்லப்பிராணிகளை விமானத்தில் கொண்டு செல்வதற்கான வெளிப்படையான கொள்கைகளை நிறுவனங்கள் வெளியிட வேண்டும்.
விமான நிறுவனங்களின் இணையதளங்கள், மொபைல் செயலிகள், முன்பதிவுத் தளங்கள் மற்றும் விமான நிலைய கவுண்டர்கள் முழுவதும் பயணிகளின் உரிமைகளை உள்ளூர் மொழிகளில் தெளிவாகக் காட்சிப்படுத்துதல் வேண்டும்” என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
Summary
No additional charges for 60% of seats on flights! Central Government
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தோ்தலையொட்டி விமான கட்டணம் உயா்வு: நான்கு மடங்கு கூடுதல் வசூலிப்பு

கோடை நோய்களுக்கு பாராசிட்டமால் கூடாது: பொது சுகாதாரத் துறை
ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் புகாா் தெரிவிக்கலாம்: போக்குவரத்துத் துறை

வாக்களிக்கச் செல்வோரிடம்... ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


