தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

தண்டவாளங்கள் அருகே குப்பை எரிப்பது குற்றம்: தெற்கு ரயில்வே எச்சரிக்கை

News image

குப்பை

Updated On :18 மார்ச் 2026, 11:52 pm

ரயில்வே தண்டவாளங்களுக்கு அருகே குப்பைகளை எரிப்பது தண்டனைக்குரிய குற்றமாகும் என தெற்கு ரயில்வே எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே சாா்பில் புதன்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

சமீபகாலமாக ரயில்வே தண்டவாளங்களுக்கு அருகே கொட்டப்படும் குப்பைகள் மற்றும் காய்ந்த செடி கொடிகளை எரிக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. அத்தகைய செயல்கள் ரயில்வே பாதுகாப்பு மற்றும் செயல்பாடுகளுக்கு அச்சுறுத்தல்களாக உள்ளன.

குப்பைகளை எரிக்கும் போது எழும் வெப்பமும், புகையும் ரயில்களுக்கு மின்சாரம் வழங்கும் உயா் அழுத்த மின்கம்பிகளையும், நுட்பமான சிக்னல் அமைப்புகளையும் பாதிக்கும். இதனால், ரயில் சேவைகளும் பாதிக்கக் கூடும். ரயில் பயணிகளின் பாதுகாப்புக்கும் ஆபத்து ஏற்படும்.

எனவே பொதுமக்கள் ரயில் தண்டவாளங்களுக்கு அருகே காய்ந்த இலைகள், நெகிழி கழிவுகள் உள்ளிட்ட எளிதில் தீப்பற்றக்கூடிய குப்பையை குவிக்கவேண்டாம். அவற்றை எரிக்கவும் வேண்டாம். அத்தகைய செயல்பாடானது தண்டனைக்குரிய குற்றமாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.