நாடாளுமன்ற மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மக்களவையில் நாளை (மார்ச் 17) பிற்பகல் 12 மணிக்கு எம்.பி.க்கள் இடைநீக்க ரத்துக்கான முன்மொழிவை மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா தாக்கல் செய்யவுள்ளார்.
தில்லியில் இன்று (மார்ச் 16) நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, 8 எம்.பி.க்கள் மீதான இடைநீக்கம் ரத்து செய்யப்படடுள்ளது.
இக்கூட்டத்தில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதாகைகள் மற்றும் செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்ட புகைப்படங்களைப் பயன்படுத்த மாட்டார்கள் என்றும் அவையில் நன்னடத்தையுடன் செயல்படுவார்கள் எனவும் எம்.பி.க்கள் தரப்பில் கூறப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடா் ஏப். 2-ஆம் தேதி வரை இரு கட்டங்களாக நடைபெறவுள்ளன.
இதில், பிப்ரவரி 3 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவா் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானம் மீது ராகுல் காந்தி உரையாற்றும்போது, முப்படைகளின் தலைமைத் தளபதி எம்.எம். நரவணே எழுதிய புத்தகத்தில் சில வரிகளைக் குறிப்பிட்டு பிரதமர் நரேந்திர மோடியையும் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கையும் விமர்சித்தார்.
பின்னர் இந்திய-அமெரிக்க வா்த்தக ஒப்பந்தத்தை அமெரிக்க அதிபா் டிரம்ப் முதலில் அறிவித்ததைக் குறிப்பிட்டு, ‘அமெரிக்காவிடம் மோடி சரணடைந்துவிட்டதாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கங்களை எழுப்பினர்.
இதனைத் தொடர்ந்து ராகுல் காந்தி பேசுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மக்களவை தலைமைச் செயலரின் மேஜை மீது ஏற முயன்றதுடன், காகிதங்களைக் கிழித்து, அவைத் தலைவா் இருக்கையை நோக்கி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வீசினர்.
இதனால், அவைக்குள் ஒழுங்கீனமாக நடந்துகொண்டதாக 8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் பெயா்களைக் குறிப்பிட்டு அவர்களை இடைநீக்கம் செய்வதற்கான தீர்மானம், குரல் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்டது.
இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பி.க்கள்
காங்கிரஸ் எம்.பி.க்களான மாணிக்கம் தாகூா், குா்ஜீத் சிங் அஜ்லா, ஹிபி ஈடன், சி.கிரண் குமாா் ரெட்டி, அமரீந்தா் சிங் வாரிங், பிரசாந்த் படோல், டீன் குரியகோஸ், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி. சு.வெங்டேசன் ஆகியோா் மீது இடைநீக்க நடவடிக்கை ரத்து செய்யப்பட்டுள்ளது.
Summary
suspension of MPs in Parliament will be revoked at 12 Noon tomorrow
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

3 மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
நாடாளுமன்ற சிறப்பு அமர்வு தொடங்கியது!
தேர்தலுக்கிடையே நாடாளுமன்ற கூட்டத்தொடர்: மத்திய அரசு மீது திருச்சி சிவா குற்றச்சாட்டு

8 எம்பிக்கள் இடைநீக்கம் ரத்து! மக்களவையில் தீர்மானம் நிறைவேற்றம்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



