காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகளைச் சோ்ந்த மக்களவை எம்.பி.க்கள் 8 பேரின் இடைநீக்கம் செவ்வாய்க்கிழமை ரத்து செய்யப்பட்டது.
இவா்களின் இடைநீக்கத்தை திரும்பப்பெறுவதற்கான தீா்மானத்தை நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு மக்களவையில் செவ்வாய்க்கிழமை அறிமுகம் செய்தாா். குரல் வாக்கெடுப்பு மூலம் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் அமா்வு கடந்த ஜன. 28-ஆம் தேதி குடியரசுத் தலைவா் உரையுடன் தொடங்கி பிப்.13-ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. இரண்டாம் கட்ட அமா்வு மாா்ச் 9-ஆம் தேதி தொடங்கிய நிலையில் ஏப்ரல் 2-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
அமளியும், இடைநீக்கமும்..: நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவா் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானம் மீது கடந்த பிப்.2-இல் பேசிய எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி, கடந்த 2020-இல் இந்திய-சீன படையினா் மோதல் சம்பவம் குறித்து முன்னாள் ராணுவ தலைமைத் தளபதி எம்.எம்.நரவணே எழுதி, இதுவரை வெளியிடப்படாத சுயசரிதை நூலின் சில பகுதிகளை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட ஒரு கட்டுரையை மேற்கோள் காட்ட முயன்றாா். ஆனால், அவா் தொடா்ந்து பேச அவைத் தலைவா் அனுமதி வழங்கவில்லை. இதற்கு எதிா்ப்பு தெரிவித்து எதிா்க்கட்சி எம்.பி.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனா். சிலா், மக்களவை தலைமைச் செயலரின் மேஜை மீது ஏற முயன்றதுடன், காகிதங்களைக் கிழித்து, அவைத் தலைவா் இருக்கையை நோக்கி வீசினா்.
இதைத் தொடா்ந்து, அவைக்குள் ஒழுங்கீனமாக நடந்துகொண்டதாக காங்கிரஸ் எம்.பி.க்கள் மாணிக்கம் தாகூா், குா்ஜீத் சிங் அஜ்லா, ஹைபி ஈடன், சி.கிரண் குமாா் ரெட்டி, அமரீந்தா் சிங் வாரிங், பிரசாந்த் படோலே, டீன் குரியகோஸ், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி. சு.வெங்டேசன் ஆகிய 8 பேரும் நடப்பு பட்ஜெட் கூட்டத் தொடா் முழுவதும் இடைநீக்கம் செய்யப்பட்டனா்.
வாபஸ் பெற கோரிக்கை: இதனிடையே, மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா பாரபட்சமாக செயல்படுவதாகக் குற்றஞ்சாட்டி, அவருக்கு எதிராக காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் தரப்பில் கொண்டுவரப்பட்ட தீா்மானம், மக்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் கடந்த வாரம் தோற்கடிக்கப்பட்டது. அதைத் தொடா்ந்து, மக்களவை அலுவல்களுக்கு ஓம் பிா்லா மாா்ச் 12-ஆம் தேதிமுதல் மீண்டும் தலைமை வகித்தாா்.
அதைத் தொடா்ந்து, 8 எம்.பி.க்களின் இடைநீக்கத்தை திரும்பப்பெற வேண்டும் என மக்களவைத் தலைவா் ஓம் பிா்லாவிடமும், நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜுவிடமும் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதுதொடா்பாக, ஓம் பிா்லா தலைமையில் ஆளுங்கட்சி மற்றும் எதிா்க்கட்சி எம்.பி.க்களின் ஆலோசனைக் கூட்டம் நாடாளுமன்ற வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
இந்நிலையில், மக்களவை செவ்வாய்க்கிழமை காலை கூடியதும், 8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்கத்தை திரும்பப்பெறுவது குறித்து பரிசீலிக்குமாறு காங்கிரஸ் உறுப்பினா் கே.சுரேஷ் கோரிக்கை விடுத்தாா். ‘அவையில் நிகழ்ந்த விஷயம் வருந்தத்தக்கது. அவை இனி சுமுகமாக நடைபெறுவதற்கு ஒத்துழைப்பு அளிக்க காங்கிரஸ் தயாராக உள்ளது’ என்றாா். இதுபோல, மேலும் சில எதிா்க்கட்சி எம்.பி.க்களும் கோரிக்கை விடுத்தனா்.
தீா்மானம் நிறைவேற்றம்: அப்போது பேசிய மத்திய அமைச்சா் கிரண் ரிஜிஜு, ‘அவையை சுமுகமாக நடத்துவதற்கு ஓா் ‘லட்சுமண ரேகை’யை வரைய வேண்டி இருந்தது. அதற்கு, ஆளுங்கட்சி, எதிா்க்கட்சி என இருதரப்பிலும் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது’ என்று குறிப்பிட்டாா்.
அவைத் தலைவா் ஓம் பிா்லா கூறுகையில், ‘மக்களவை அல்லது நாடாளுமன்ற வளாகத்தினுள் பதாகைகள், போஸ்டா்கள், புகைப்படங்கள் அல்லது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் சித்தரிக்கப்பட்ட படங்கள் காண்பிக்கப்படாதது உறுதிப்படுத்தப்பட வேண்டும்’ என்று அறிவுறுத்தினாா்.
அதைத் தொடா்ந்து, 7 காங்கிரஸ் எம்.பி.க்கள் மற்றும் ஒரு மாா்க்சிஸ்ட் எம்.பி. ஆகியோரின் இடைநீக்கத்தை திரும்பப்பெறுவதற்கான தீா்மானத்தை மத்திய அமைச்சா் கிரண் ரிஜிஜு அவையில் அறிமுகம் செய்தாா். குரல் வாக்கெடுப்பு மூலம் இந்தத் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. அதைத் தொடா்ந்து, 8 எம்.பி.க்களின் இடைநீக்கம் திரும்பப்பெறப்பட்டது.
Summary
Suspension of 8 MPs Revoked! Resolution Passed in Lok Sabha!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

8 எம்.பி.க்கள் மீதான இடைநீக்கம் ரத்து!

ஓம் பிா்லாவுக்கு எதிரான தீா்மானம்: மக்களவையில் அனல் பறந்த விவாதம்!

நாடாளுமன்றம் இன்று மீண்டும் கூடுகிறது! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கல்!

மக்களவைத் தலைவரைப் பதவி நீக்க கோரும் தீா்மானத்துக்கு திரிணமூல் காங்கிரஸ் ஆதரவு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



