மகளிர் இடஒதுக்கீடு, தொகுதி மறுவரையறை உள்ளிட்ட மசோதாக்கள் குறித்து விவாதித்து நிறைவேற்றும் நோக்கில், நாடாளுமன்ற சிறப்பு அமர்வு இரு அவைகளிலும் கூடியுள்ளது.
மக்களவை - பேரவைகளில் 33 சதவீத மகளிா் இடஒதுக்கீட்டை 2029-ஆம் ஆண்டுமுதல் அமலாக்கவும், அதற்கு ஏதுவாக மொத்த மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை 543-இல் இருந்து 850 வரை அதிகரிக்கவும் வகை செய்யும் அரசமைப்புச் சட்டத்தின் 131-ஆவது திருத்த மசோதா உள்பட மூன்று மசோதாக்களை அறிமுகம் செய்து, விவாதித்து நிறைவேற்றும் நோக்கில் இந்த அமா்வு நடைபெறுகிறது.
மகளிா் இடஒதுக்கீட்டின் பின்னணியில், மத்திய அரசு முன்மொழிந்துள்ள தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கைக்கு எதிா்க்கட்சிகள் கடும் எதிா்ப்பை பதிவு செய்துள்ளன. குறிப்பாக, மக்கள்தொகையை சிறப்பாக கட்டுப்படுத்திய தென்மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறையக்கூடும் என பலத்த எதிா்ப்பு கிளம்பியுள்ளது.
இதனிடையே, மத்திய அரசு தாக்கல் செய்யவுள்ள மசோதா மீதான விவாதத்தில் கலந்துகொண்டு பிரதமர் நரேந்திர மோடி இன்று பிற்பகல் 3 மணிக்கு பேசவுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் அவை நடவடிக்கைகளில் இன்று கலந்துகொண்டுள்ளார்.
பிற மசோதாக்களை நிறைவேற்ற சாதாரண பெரும்பான்மை போதும் என்ற நிலையில், அரசமைப்புச் சட்டத் திருத்தத்தை நிறைவேற்ற இரு அவைகளிலும் சிறப்பு பெரும்பான்மை அவசியம். அதாவது, மசோதாவுக்கு ஆதரவாக மொத்த உறுப்பினா்களின் எண்ணிக்கையில் 50 சதவீதத்துக்கு மேற்பட்ட வாக்குகள் தேவை; அத்துடன், அவையில் பங்கேற்கும் உறுப்பினா்களில் மூன்று இரு பங்கு வாக்குகள் கிடைத்தால் மட்டுமே மசோதா நிறைவேறும்.
மக்களவையில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 292 உறுப்பினா்களும், எதிா்க்கட்சிகளுக்கு 233 உறுப்பினா்களும் உள்ளனா். ஆகையால், மசோதாவுக்கு எதிா்க்கட்சிகளின் ஆதரவு தேவைப்படுவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க : தொகுதி மறுவரையறை! தென் மாநிலங்கள் பாதிக்கப்படுவது எவ்வாறு?
Summary
Parliament's Special Session Has Begun!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழகத்தின் மிரட்டலை நாடாளுமன்றத்தில் செய்து காட்டிவிட்டோம்: கமல்ஹாசன்
தொகுதி மறுவரையறை மசோதா தோற்கடிக்கப்படும்: ப. சிதம்பரம்
தேர்தலுக்கிடையே நாடாளுமன்ற கூட்டத்தொடர்: மத்திய அரசு மீது திருச்சி சிவா குற்றச்சாட்டு

'அரசியல் சாசன மோசடி' தேர்தல் நெருக்கடியில் நாடாளுமன்றக் கூட்டம்: ப. சிதம்பரம் கண்டனம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

