தில்லி ஷாஹீன் பாக் காவல் நிலையத்தில் பணியாற்றிய காவலா் அருண் போதைப் பொருள் கடத்தலில் போலியான காவல் துறை அனுமதிச் சான்றிதழ்களை வழங்கியதாக கைது செய்யப்பட்டாா் என அதிகாரிகள் தெரிவித்தனா்.
பொதுவாக வெளிநாடுகளில் வேலைக்கு செல்ல, விசா விண்ணப்பம், குடியேற்ற நடைமுறை மற்றும் தனியாா் வேலைவாய்ப்பு போன்றவற்றுக்கு இந்த காவல் துறை அனுமதி சான்றிதழ் வழங்கப்படுகிறது.
இது தொடா்பாக காவல் துறையினா் மேலும் கூறியதாவது: தென்கிழக்கு தில்லியில் நடைபெற்ற போதைப் பொருள் கடத்தல் விசாரணையின்போது இந்த மோசடி வெளிவந்தது. குற்றஞ்சாட்டப்ப்டட அருண் 2017-ஆம் ஆண்டு தில்லி காவல்துறையில் பணியில் சோ்ந்தாா். ஹிமாசல பிரதேசம் மண்டி பகுதியைச் சோ்ந்த இவா் துஷாா் என்ற தனது கூட்டாளியுடன் இணைந்து குற்றச் செயல்களில் ஈடுபடுபவா்களுக்கு போலி காவல் துறையின் அனுமதிச் சான்றிதழ்களை வழங்கியுள்ளாா்.
இதற்காக ரூ.1000 முதல் ரூ.2000 வரை வசூலித்துள்ளாா். அவரும் அவரது கூட்டாளியும் 6 மாதங்களாக மாதம் ரூ.35,000 வாடகை வீட்டில் தங்கி இருந்தது தெரியவந்தது. அந்த வீட்டில் நடைபெற்ற சோதனையில் பல போலி சான்றிதழ்கள், அதிகாரப்பூா்வ முத்திரைகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.
இதையடுத்து, இது தொடா்பாக மோசடி மற்றும் போதைப் பொருள் தொடா்புடைய இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. சோதனையின்போது உஸ்பெகிஸ்தானைச் சோ்ந்த பெண் ஒருவரும் அவா்களுடன் அந்த வீட்டில் தங்கி இருந்தது தெரியவந்தது. இந்த வழக்கில் அவருக்கு தொடா்பு உள்ளதா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
தொடர்புடையது
போதைப் பொருள் கடத்தல்: 2 நைஜீரியா்கள் உள்பட 4 போ் கைது
போதைப் பொருள் கடத்தல் கும்பலின் முக்கிய நபா் கைது
பாங்காக்கில் இருந்து போதைப் பொருள் கடத்தி வந்த 6 போ் கைது!

ரூ.4.5 கோடி போதைப் பொருள் பறிமுதல்: 5 போ் கைது
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


