எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியுடன் சேர்ந்து மற்ற காங்கிரஸ் தலைவர்களும் சீரழிந்துவிட்டனர் என்று மக்களவையில் மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு கடுமையாக விமர்சித்துள்ளார்.
நாட்டில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு குறித்து மக்களவையில் விவாதிக்கக் கோரி எதிர்க்கட்சி எம்பிக்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இன்று காலையும் எதிர்க்கட்சிகள் தாக்கல் செய்த ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸை மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா நிராகரித்த நிலையில், எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர்.
இதையடுத்து அவை நடவடிக்கைகள் பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டு, மீண்டும் தொடங்கிய நிலையில், எதிர்க்கட்சி எம்பிக்கள் மீண்டும் அமளியில் ஈடுபட்டனர்.
அப்போது அவையில் இருந்த நாடாளுமன்ற விவாகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு பேசியதாவது:
“நாடாளுமன்ற நடவடிக்கைகளை சீர்குலைக்கும் உங்களின் நடவடிக்கைகளால் மக்கள் உங்கள் மீது கோபமாக இருக்கின்றனர். நீங்கள் இனி ஆட்சிக்கே வர முடியாது.
உங்களின் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு இதனை புரிய வைக்கும் தலைவர்கள் எவரும் காங்கிரஸில் இல்லை என்பதை நினைத்து வருந்துகிறேன். ராகுலுடன் சேர்ந்து மற்ற காங்கிரஸ் தலைவர்களும் சீரழிந்துவிட்டனர்.
நீங்கள் செய்ததை சரிசெய்ய இன்னும் காலமும் வழிகளும் இருக்கின்றன. இல்லையெனில், மக்கள் உங்களை தண்டிப்பார்கள்” எனத் தெரிவித்தார்.
மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜுவின் பேச்சுக்கு எதிர்க்கட்சி எம்பிக்கள் எதிர்ப்பு தெரிவித்து அமளியைத் தொடர்ந்த நிலையில், பிற்பகல் 2 மணி வரை அவை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டன.
Summary
Along with Rahul, other Congress leaders have also deteriorated - Union Minister
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

முதல்வர் ஸ்டாலின் தவறாக வழிநடத்தப்படுகிறார்! மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு

தாமரையுடன் இலையும் சேர்ந்து மலரும்: பியூஸ் கோயல்

வெளிநாட்டு பங்களிப்பு திருத்த மசோதா: எதிா்க்கட்சிகளின் குற்றச்சாட்டு தவறானது- கிரண் ரிஜிஜு

வரும் வார இறுதி நாள்களில் நாடாளுமன்ற அமா்வு கிடையாது - மத்திய அமைச்சா் கிரண் ரிஜிஜு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



