ஈரான் தலைமை மதகுரு அயதுல்லா கமேனி படுகொலையில் பிரதமர் மோடி அமைதி காப்பது ஏன் என காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.
இதுகுறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் பக்கத்தில், "ஈரான் அரசமைப்புச் சட்டத்தின் தலைலவரான அயதுல்லா கமேனியை பிப். 28-ல் அமெரிக்காவும் இஸ்ரேலும் படுகொலை செய்தனர். ஆனால், இதுகுறித்து பிரதமர் மௌனம் காக்கிறார்; வெளியுறவு அமைச்சரும் அமைதியாக இருக்கிறார். நாடாளுமன்றத்தில் இன்னும் இரங்கல் குறிப்புகூட இல்லை.
வளைகுடா நாடுகள் மீதான தாக்குதலுக்கு ஈரானுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. ஆனால், ஈரான் மீதான அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலுக்கு இந்தியா அமைதி காக்கிறது.
இந்தாண்டு பிரிக்ஸ் மாநாட்டுக்கு இந்தியாதான் தலைமை தாங்குகிறது. இந்த பிரிக்ஸ் நாடுகளில் ஈரானும் ஒரு பகுதி என்பதை இந்தியா நினைவில்கொள்ள வேண்டும்.
2024 மே மாதத்தில் ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, ஒரு ஹெலிகாப்டர் விபத்தில் மர்மமான முறையில் பலியானார். இதனைத் தொடர்ந்து, 2024 மே 21-ல் ஒரு நாள் துக்கத்துக்கு மோடி அரசு உத்தரவிட்டது. தொடர்ந்து, 2024 ஜூலை 1 ஆம் தேதியில் நாடாளுமன்றம் கூடியபோது, இரங்கலும் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், இப்போது மட்டும் ஏன் தயக்கம்? ஏதோ ஒன்றில் சமரசம் செய்யப்பட்ட பிரதமர், அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய நண்பருடன் பகையாவதைத் தவிர்க்க விரும்புகிறார் என்பதில் சந்தேகமேயில்லை" என்று தெரிவித்துள்ளார்.
Summary
PM doesn't want to antagonise US, Israeli 'friend': Congress slams 'silence' on Khamenei assassination
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மனநிலை மாற வேண்டும்

ஈரான் - அமெரிக்கா அமைதிப்பேச்சு! சௌதி, கத்தார், துருக்கி செல்கிறார் பாக். பிரதமர்!

பாலங்கள் கட்டிக்கொள்ளலாம்... ஆனால், அமெரிக்காவுக்குப் பாடம் புகட்ட சரியான நேரம் இதுதான்: ஈரான்

அமெரிக்கா, இஸ்ரேலுக்குப் பணிந்துபோகிறார் பிரதமர் மோடி! - பிரியங்கா காந்தி தாக்கு!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



