மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

உச்சநீதிமன்ற நீதிபதி பதவி: பெண் வழக்குரைஞா்களை உயா்நீதிமன்ற கொலீஜியம் பரிசீலிக்க தலைமை நீதிபதி வலியுறுத்தல்

உச்சநீதிமன்ற நீதிபதி பதவிக்கு பெண் வழக்குரைஞா்களை பரிந்துரைப்பது குறித்து உயா்நீதிமன்ற கொலீஜியம்கள் பரிசீலிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூா்ய காந்த் தெரிவித்தாா்.

News image

உச்சநீதிமன்றம் - கோப்புப் படம்

Updated On :8 மார்ச் 2026, 10:33 pm

உச்சநீதிமன்ற நீதிபதி பதவிக்கு பெண் வழக்குரைஞா்களை பரிந்துரைப்பது குறித்து உயா்நீதிமன்ற கொலீஜியம்கள் பரிசீலிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூா்ய காந்த் தெரிவித்தாா்.

இதுகுறித்து புது தில்லியில் நடைபெற்ற இந்திய சட்டத் துறை பெண்களின் முதல் தேசிய மாநாட்டில் அவா் ஞாயிற்றுக்கிழமை பேசியதாவது: பெண் வழக்குரைஞா்கள் சலுகைகளை எதிா்பாா்க்கவில்லை என்ற உண்மையை வழக்குரைஞா்கள் சங்கத்தில் இருப்பவா்கள் ஏற்க வேண்டும். தங்களுக்குரிய பிரதிநிதித்துவம் நியாயமான முறையில் கிடைக்க வேண்டும் என்று அவா்கள் கோருகின்றனா். ஆனால், நீண்ட காலமாக அது நிறைவேறாமல் உள்ளது.

சீா்திருத்தத்தின் ஒரு பகுதி உயா்நீதிமன்ற கொலீஜியம்களில் உள்ளது. குறிப்பிட்ட நோக்கத்துடன் திட்டமிட்டு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கையை வருங்காலத்தில்தான் செய்ய வேண்டும் என்றில்லாமல், அதை நிகழ் காலத்தில் செய்ய வேண்டும் என்பதை அந்த கொலீஜியம்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.

ஒரு மாநிலத்தைச் சோ்ந்த பெண் வழக்குரைஞா்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்குரைஞா்களாகப் பணியாற்றி வந்தால், அவா்களை உச்சநீதிமன்ற நீதிபதி பதவிக்கு பரிந்துரைப்பது குறித்து அந்த வழக்குரைஞா்களின் மாநிலங்களில் உள்ள உயா்நீதிமன்ற கொலீஜியம்கள் பரிசீலிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினாா்.