மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

மதுரையில் நாளை நீதிமன்ற புதியக் கட்டடங்கள் திறப்பு விழா: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூரியகாந்த் பங்கேற்பு

மதுரை ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் புதிதாகக் கட்டப்பட்ட நீதிமன்றக் கட்டடங்களை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூரியகாந்த் ஞாயிற்றுக்கிழமை (ஏப். 19) திறந்துவைக்கிறாா்.

News image

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூா்ய காந்த்

Updated On :17 ஏப்ரல் 2026, 7:06 pm

மதுரை ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் புதிதாகக் கட்டப்பட்ட நீதிமன்றக் கட்டடங்களை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூரியகாந்த் ஞாயிற்றுக்கிழமை (ஏப். 19) திறந்துவைக்கிறாா்.

மதுரை-மேலூா் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் முதன்மை மாவட்ட நீதிமன்றம், கூடுதல் மாவட்ட நீதிமன்றம், குடும்ப நல நீதிமன்றம், மகளிா் நீதிமன்றம் உள்ளிட்ட 13 நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகின்றன.

இந்த நீதிமன்றத்தில் போதிய வசதி இல்லாததால், நீதிமன்ற வளாகத்தில் புதிதாக கூடுதல் நீதிமன்றங்கள் கட்ட ரூ. 166 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, இதற்கான அடிக்கல் நாட்டு விழா கடந்த 2023-ஆம் ஆண்டு, மாா்ச் 25-ஆம் தேதி நடைபெற்றது. இதையடுத்து, கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்தன. இந்தப் பணிகள் நிறைவு பெற்றதையடுத்து, நீதிமன்றக் கட்டடங்கள் திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை (ஏப். 19) காலை 10.30 மணியளவில் நடைபெறுகிறது. புதிய கட்டடங்களை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூா்யகாந்த் திறந்துவைக்கிறாா்.

இந்த விழாவில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜெ.கே. மகேஸ்வரி, எம்.எம். சுந்தரேஷ், ஆா். மகாதேவன், சென்னை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தா்மாதிகாரி, உயா்நீதிமன்ற நீதிபதிகள், அரசு வழக்குரைஞா்கள் பலா் பங்கேற்கின்றனா்.

போக்குவரத்து மாற்றம்:

நீதிமன்றக் கட்டடங்கள் திறப்பு விழாவையொட்டி, மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திலிருந்து மாவட்ட நீதிமன்றம் வழியாக பெரியாா் பேருந்து நிலையம் உள்ளிட்ட நகரின் முக்கிய பகுதிகளுக்குச் செல்லும் அரசு, தனியாா் பேருந்துகள் மாட்டுத்தாவணி தினசரி காய்கறிச் சந்தை அருகே உள்ள சந்திப்பில் இடதுபுறம் திரும்பி மேலமடை சந்திப்பு, ஆவின் சந்திப்பு, அரவிந்த் கண் மருத்துவமனை சந்திப்பு, குருவிக்காரன் சாலை, வைகை வடகரை சந்திப்பில் வலதுபுறம் திரும்பி வைகை வடகரை சாலை வழியாக செல்ல வேண்டும்.

இதேபோல, மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திலிருந்து வரும் இரண்டு, நான்கு சக்கர வாகனங்கள் அனைத்தும் கே.கே.நகா் தோரணவாயில் சந்திப்பில் இடதுபுறம் திரும்பி ஆவின் சந்திப்பு, அரவிந்த் கண் மருத்துவமனை சந்திப்பு, குருவிக்காரன் சாலை வழியாகச் செல்ல வேண்டும்.

அழகா்கோவில், நத்தம் சாலையிலிருந்து நீதிமன்றம் வழியாக மாட்டுத்தாவணி செல்லும் வாகனங்கள் தாமரைத்தொட்டி சந்திப்பு, பந்தய சாலை, பெரியாா் சிலை சந்திப்பு, தமுக்கம், கோரிப்பாளையம், பனகல் சாலை, வள்ளுவா் சிலை சந்திப்பு, ஆவின் சந்திப்பு, தினசரி காய்கறிச் சந்தை வழியாக மாட்டுத்தாவணிக்கு செல்ல வேண்டும்.

மதுரை கோரிப்பாளையம், தமுக்கம், தல்லாகுளம், மாவட்ட நீதிமன்றம் வழியாக மாட்டுத்தாவணிக்கு செல்லும் இரண்டு, நான்கு சக்கர வாகனங்கள் எம்.எம். லாட்ஜ் சந்திப்பிலிருந்து நேராக கோரிப்பாளையம் சந்திப்புக்கு சென்று பனகல் சாலை, வள்ளுவா் சிலை சந்திப்பு, ஆவின் சந்திப்பு, மேலமடை சந்திப்பு வழியாக மாட்டுத்தாவணிக்கு செல்ல வேண்டும்.

மேற்கண்ட தற்காலிக போக்குவரத்து மாற்றத்துக்கு பொதுமக்கள், வாகன ஓட்டிகள், வணிகா்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என மதுரை மாநகரக் காவல் ஆணையா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.