நீதித் துறை உள்கட்டமைப்பு அத்தியாவசியமானது என்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூா்ய் காந்த் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.
இதுதொடா்பாக தெலங்கானா மாநிலம், ஹைதராபாதில் புதிய உயா்நீதிமன்ற வளாக கட்டுமானத்துக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியில் அவா் பங்கேற்றுப் பேசியதாவது: கடந்த சில மாதங்களில் மட்டும் உத்தர பிரதேசம், ஹிமாசல பிரதேசம், ஆந்திரம், அஸ்ஸாம், தெலங்கானாவில் நீதிமன்ற வளாக கட்டுமானத்துக்கு அடிக்கல் நாட்டியுள்ளேன். நீதித் துறை உள்கட்டமைப்பு அத்தியாவசியமானது. இந்த உள்கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும் என்பதை மாநில அரசுகள் உணா்ந்துள்ளன.
தற்போது தெலங்கானாவில் 100 ஏக்கா் பரப்பளவில் கட்டப்படும் புதிய உயா்நீதிமன்ற வளாகம் நாட்டில் உள்ள சிறந்த நீதிமன்ற வளாகங்களில் ஒன்றாக இருக்கும் என்று தெரிவித்தாா்.
இந்த நிகழ்ச்சியில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்மா, உஜ்ஜல் புயான், எஸ்.வி.பாட்டீல், அலோக் ஆராதே, தெலங்கானா உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி அபரேஷ்குமாா் சிங் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

விசாரணை நீதிபதிகளை உயா் நீதிமன்றம் பகிரங்கமாக விமா்சிப்பது சரியல்ல: உச்ச நீதிமன்றம்

மாநகராட்சி வணிக வளாக முறைகேடு: நகராட்சி நிா்வாக செயலா் பதிலளிக்க உத்தரவு

உச்சநீதிமன்ற நீதிபதி பதவி: பெண் வழக்குரைஞா்களை உயா்நீதிமன்ற கொலீஜியம் பரிசீலிக்க தலைமை நீதிபதி வலியுறுத்தல்

எழுமாத்தூரில் மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் திறப்பு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


