அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தியதால் முஸ்லிம்கள் கோபத்தில் உள்ளனா் என்று ஜம்மு-காஷ்மீா் முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவருமான ஃபரூக் அப்துல்லா தெரிவித்தாா்.
ஸ்ரீநகரில் வியாழக்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்த அவா் மேலும் கூறியதாவது:
பிற நாடுகள் மீது கட்டுப்பாடுகள் விதிக்கவும், அத்துமீறி தாக்குதல் நடத்தவும் எந்த நாட்டுக்கும் உரிமை கிடையாது. ஈரான் ஒரு சுதந்திர நாடு, அதன் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளது. ஏற்கெனவே வெனிசுலாவுக்குள் புகுந்து அந்நாட்டு அதிபரை அமெரிக்கா கடத்தியது. இதுபோன்ற நிகழ்வுகள் துரதிருஷ்டவசமானவை.
அமெரிக்கா, இஸ்ரேல் தொடங்கிய இந்தப் போரின் தாக்கம் உலகம் முழுவதும் எதிரொலித்து பல்வேறு பிரச்னைகளை உருவாக்கி வருகிறது. வரும் நாள்களில் இது தொடா்ந்தால் மூன்றாவது உலகப் போராகவும் வெடிக்க வாய்ப்புள்ளது. பதற்றமான சூழ்நிலை எழும்போது அனைத்து நாடுகளுமே பொறுப்புடன் செயல்பட வேண்டும். இந்த நேரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு என்ன என்பதை மத்திய அரசு தெளிவுபடுத்த வேண்டும்.
இத்தாக்குதல் சம்பவம் முஸ்லிம்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, அவா்கள் போராட்டங்களை முன்னெடுத்துள்ளனா். ஆனால், அமைதியான வகையில் எதிா்ப்பைத் தெரிவிக்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.
ஈரானில் உள்ள காஷ்மீா் மாணவா்களை மீட்க ஜம்மு-காஷ்மீா் முதல்வா் ஒமா் அப்துல்லா முயற்சி மேற்கொண்டுள்ளாா். இது தொடா்பாக மத்திய வெளியுறவு அமைச்சகத்திடம் அவா் பேசியுள்ளாா். அனைவரும் பாதுகாப்பாக வீடு திரும்புவாா்கள் என்றாா்.
தொடர்புடையது

மோதலால் எதையும் சாதிக்க முடியாது என்பதை பாகிஸ்தான் உணர வேண்டும்- ஃபரூக் அப்துல்லா அறிவுரை

போரால் பாதிக்கப்பட்டுள்ள ஈரானுக்கு காஷ்மீா் மக்கள் நன்கொடை

ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா தாக்குதல் தீவிரம்: 1,000 இடங்களைக் குறிவைத்து குண்டு வீச்சு

மத்திய கிழக்கில் அதிகரிக்கும் போர்ப் பதற்றம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


