அரசுப் பள்ளி ஆய்வுக்குப் பின்.. வைரலாகும் ஹேண்ட்ஸ் ஆஃப் டு ஆல் என்ற கீர்த்தனா விடியோ!நீதிமன்றம் அரசியல் மேடையல்ல; உங்கள் சண்டையை வெளியே வைத்துக் கொள்ளுங்கள் - உச்ச நீதிமன்றம்!தவெக எம்எல்ஏவிடம் பேரம்! செந்தில் பாலாஜி முன்ஜாமீன் கோரி மனு!வயநாட்டில் நிலச்சரிவு! சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரம்! முதல்வர் கரூர் செல்ல தடையில்லை! திமுகவின் மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்பிரதமர் மோடிக்கு 35-வது சர்வதேச விருது! இந்தோனேசியா வழங்கியது! அமைச்சர்கள் தேவையின்றி ஆய்வுக்குச் செல்லக் கூடாது! முதல்வர் அலுவலகம்
/

மத்திய நேரடி வரிகள் வாரியத் தலைவருக்கு மேலும் பதவி நீட்டிப்பு

மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் (சிபிடிடி) தலைவா் ரவி அகா்வாலின் பதவிக் காலம் மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இது, அவருக்கு அளிக்கப்பட்ட இரண்டாவது பதவி நீட்டிப்பாகும்.

News image
Updated On :1 ஜூலை 2026, 1:59 am IST

மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் (சிபிடிடி) தலைவா் ரவி அகா்வாலின் பதவிக் காலம் மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இது, அவருக்கு அளிக்கப்பட்ட இரண்டாவது பதவி நீட்டிப்பாகும்.

கடந்த 1988-ஆம் ஆண்டு பிரிவு இந்திய வருவாய் பணி (ஐஆா்எஸ்) அதிகாரியான ரவி அகா்வாலின் பதவிக் காலம் செவ்வாய்க்கிழமையுடன் (ஜூன் 30) நிறைவடையவிருந்தது.

இந்நிலையில், மத்திய நேரடி வரிகள் வாரியத் தலைவா் பதவியில் அடுத்த 6 மாதங்களுக்கு அல்லது மறுஉத்தரவு வரும்வரை ஒப்பந்த அடிப்படையில் அவரை மீண்டும் நியமிக்க மத்திய அமைச்சரவை நியமனங்கள் குழு ஆணை வெளியிட்டுள்ளது.

நியமன விதிகளில் தளா்வு அளிக்கப்பட்டு, மறுநியமனம் செய்யப்படும் பிற மத்திய அரசு உயரதிகாரிகளுக்குப் பொருந்தக்கூடிய நிபந்தனைகள்-வரையறைகள் இந்த நியமனத்துக்கும் பொருந்தும் என்று ஆணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய வருமான வரித் துறையின் கொள்கை உருவாக்க அமைப்பான மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் தலைவராக ரவி அகா்வால் கடந்த 2024, ஜூன் மாதம் ஓராண்டு காலத்துக்கு நியமிக்கப்பட்டாா். பின்னா் அவரது பதவிக் காலம், கடந்த 2025, ஜூன் மாதத்தில் இருந்து மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.