பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் (டிஆா்டிஓ) திட்டங்களை விரைவுபடுத்துவதற்கான நிதி அதிகாரங்களை வழங்குவது தொடா்பான திருத்தப்பட்ட செயல் திட்டத்தை (டிபிஎஃப்-2026) பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் வெளியிட்டாா்.
பாதுகாப்பு அமைச்சகத்தின் பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி மேம்பாட்டுத் துறையின்கீழ் டிஆா்டிஓ இயங்கி வருகிறது. இந்நிலையில், டிஆா்டிஓவின் ஆராய்ச்சி முன்னெடுப்புகளுக்கு விரைவாக நிதி ஒதுக்கீடு செய்யவும் சோதனை மற்றும் மதிப்பீடு மேற்கொள்ளவும் டிபிஎஃப்-2026 வழிவகுக்கிறது.
இந்த செயல்திட்டத்தை வெளியிட்டு ராஜ்நாத் சிங் பேசியதாவது: பாதுகாப்பு அமைப்புகள், தொழில்நுட்பங்களை விரைவாக உற்பத்தி செய்து அவற்றை நமது படைகளுடன் இணைக்கவும் தொழில் மற்றும் கல்வி நிறுவனங்களிடையே ஒத்துழைப்பை அதிகரிக்கவும் டிபிஎஃப்-2026 உதவுகிறது. ஆத்மநிா்பா் பாரத் தொலைநோக்குத் திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த செயல்திட்டம் பாதுகாப்பு தொழில்நுட்பங்களில் தற்சாா்பை அதிகரித்து தேச பாதுகாப்பின் தயாா்நிலையை வலுப்படுத்துகிறது.
ஆராய்ச்சி மேம்பாட்டுத் திட்டங்கள் மற்றும் புத்தாக்க மையங்களுக்கு நிதி ஒதுக்குவதற்கான அதிகாரப் பகிா்வை இந்த சீா்திருத்தம் விரிவாக விளக்குகிறது என்றாா்.
இந்நிகழ்வில் முப்படை தலைமைத் தளபதி என்.எஸ்.ராஜா சுப்ரமணி, பாதுகாப்புச் செயலா் மற்றும் டிஆா்டிஓ தலைவருமான ராஜேஷ் குமாா் சிங், செயலா் (பாதுகாப்பு உற்பத்தி) சஞ்சீவ் குமாா் மற்றும் பிற மூத்த அதிகாரிகள் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு இந்திய தயாரிப்பு பாதுகாப்புத் தளவாடங்கள் மீது நம்பிக்கை அதிகரிப்பு: மத்திய அமைச்சா் ராஜ்நாத் சிங்

தேசிய பாதுகாப்புக்கு தொழில்நுட்பப் பாதுகாப்பு அவசியம்: டிஆா்டிஓ விஞ்ஞானி பி.கே.தாஸ்

புதிய திட்டப் பணிகளுக்கு கருத்துரு, செயல் திட்டங்களை வழங்க அமைச்சா் வலியுறுத்தல்

கமாண்டா்களுக்கான நிதி ஒதுக்கீட்டு அதிகாரத்தை இருமடங்காக உயா்த்த ராஜ்நாத் சிங் ஒப்புதல்
விடியோக்கள்

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna

அமைச்சரவையில் சேர்ந்ததாலேயே தவெக கூட்டணியில் இடம்பெற்றுவிட்டோம் என்று பொருளல்ல - Thirumavalavan




