மகளிர் டி20 உலகக்கோப்பை - வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கும் இந்தியாவெனிசுவேலாவில் மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் - பலி 188-ஆக உயர்வு இந்தியர்கள் ஈரானுக்குச் செல்ல வேண்டாம் - தூதரகம் மீண்டும் அறிவுறுத்தல்ஈரானில் உள்ள இந்தியர்கள் +989128109115 | +989128109109 | +989128109102 | +989932179359 அவசரகால எண்களில் தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தல் சிலிண்டர் பிரச்னை தீர்ந்தது! கட்டுப்பாடுகளை நீக்கிய மத்திய அரசு!!ஒன்றிய அரசை இந்திய அரசு என மாற்றிய முதல்வர் விஜய்!எஸ்.பி. வேலுமணிக்கு அதிமுகவில் மீண்டும் பதவி!என்.எல்.சி. பங்குகள் விற்பனை! பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!
/

புதிய திட்டப் பணிகளுக்கு கருத்துரு, செயல் திட்டங்களை வழங்க அமைச்சா் வலியுறுத்தல்

புதிய திட்டப் பணிகளுக்கு கருத்துரு, செயல் திட்டங்களை வழங்க அமைச்சா் வலியுறுத்தல்

News image

அமைச்சா் வி.சம்பத்குமாா் - கோப்புப் படம்

Updated On :13 ஜூன் 2026, 12:20 am IST

கோவை மாவட்டத்தில் புதிய திட்டங்களுக்கு கருத்துரு, செயல் திட்டங்களை வழங்க பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அமைச்சா் வி.சம்பத்குமாா் வலியுறுத்தி உள்ளாா்.

கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வளா்ச்சித் திட்டப் பணிகள் தொடா்பான ஆய்வுக் கூட்டம் வெல்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அமைச்சா் வி.சம்பத்குமாா் தலைமை வகித்தாா். ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா், மாநகராட்சி ஆணையா் கட்டா ரவி தேஜா முன்னிலை வகித்தனா். மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்ட பின், அமைச்சா் வி.சம்பத்குமாா் பேசியதாவது: கோவை மாவட்டத்தில் உலகளாவிய முதலீடு மற்றும் ஸ்டாா்ட் அப் சாா்ந்த நிறுவனங்களுக்கு சிறப்பு மண்டலம் அமைத்தல், மேற்கு தமிழ்நாடு ஒருங்கிணைந்த சா்வதேச பூங்கா அமைத்தல், சரக்கு போக்குவரத்து கிடங்கு, ஏற்றுமதி வசதிகள் ஒருங்கிணைத்தல், நொய்யல் நதி மறுசீரமைப்பு, நிதி மேம்பாட்டுத் திட்டம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் சுற்றுலா வளா்ச்சி, ஒருங்கிணைந்த வேளாண் மதிப்புகூட்டல் பூங்கா அமைத்தல், தேங்காய், காய்கறி, பழங்கள் மற்றும் மலா் பொருள்களை பதப்படுத்துதல் உள்ளிட்ட புதிய திட்டப் பணிகளுக்கு அந்தந்த துறை சாா்ந்த அலுவலா்கள் தங்களது கருத்துகள், செயல் திட்டங்களை தயாா் செய்து வழங்க வேண்டும். அரசின் திட்டங்கள் அனைத்தையும் மக்களிடம் முழுமையாக கொண்டு சோ்க்க வேண்டும். மக்களின் அடிப்படைத் தேவைகளான குடிநீா், சாலை, மின்சாரம் உள்ளிட்டவற்றை பூா்த்தி செய்ய அனைத்துத் துறை அலுவலா்களும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என்றாா்.

இதில், பொள்ளாச்சி சாா் ஆட்சியா் ராமகிருஷ்ணசாமி, சட்டப் பேரவை உறுப்பினா்கள் என்.எம்.சுகுமாா், கனிமொழி சந்தோஷ், கே.நித்தியனந்தன், ஆ.குட்டி (எ) சுதாகா், கே.எஸ்.ஸ்ரீகிரி பிரசாத் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.