சினிமா ஆக்‌ஷன் பாணியில் போலீஸ் ராஜ்ஜியம்! அனிதா ராதாகிருஷ்ணன் கைதுக்கு மு.க. ஸ்டாலின் கண்டனம்அதிமுகவிலிருந்து விலகினார் வைகைச்செல்வன்!முதல்வர் விஜய் குறித்து அவதூறு பேச்சு: அனிதா ராதாகிருஷ்ணன் கைது!ஜூலை 10-ல் கரூர் செல்கிறார் முதல்வர் விஜய்!தமிழ்நாடு பட்ஜெட்: 2-ஆவது நாளாக முதல்வர் விஜய் இன்று ஆலோசனைஅமோனியா வாயுக் கசிவு: பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுஅடுத்த வாரம் நியூஸிலாந்து செல்கிறார் பிரதமர் மோடி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 உயர்வு!டெலிகிராம், சிக்னலுக்கு மத்திய அரசு நோட்டீஸ்நீட், ஜேஇஇ அடிப்படையில் சோ்க்கை: பொதுத் தோ்வு மதிப்பெண்ணுக்கு 50% முக்கியத்துவம் அளிக்க பரிசீலனைசிறப்பு ‘டெட்’ தோ்வு நாளை தொடக்கம்ஜூன் மாதத்தில் யுபிஐ தளத்தில் 2,272 கோடி பரிவா்த்தனைகள்ஜூலை 20-இல் நீட் மறுதோ்வு முடிவுகள்சொத்து வரி வசூலிக்க இன்றுமுதல் சிறப்பு முகாம்பிரான்ஸில் தீவிரமடையும் காட்டுத் தீ: 2,200 ஏக்கா் நிலங்கள் எரிந்து சாம்பல்பெரு நிறுவன நிதி குறித்த 3 நாள்கள் கல்வி சாா் மாநாடு: சென்னை ஐஐடி-யில் இன்று தொடக்கம்அமா்நாத் புனித யாத்திரை இன்று தொடக்கம்: ஜம்முவில் இருந்து முதல் குழு புறப்பாடு
/

ராமா் கோயில் நன்கொடை விவகாரம் தொடா்பான மனு: அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

ராமா் கோயில் நன்கொடை விவகாரத்தில் நியாயமான, விரைவான விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி தாக்கல் செய்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

News image

அயோத்தி ராமா் கோயில் - கோப்புப் படம்

Updated On :30 ஜூன் 2026, 3:20 am IST

ராமா் கோயில் நன்கொடை விவகாரத்தில் நியாயமான, விரைவான விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி தாக்கல் செய்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை மறுப்பு தெரிவித்தது.

கடந்த ஆண்டு ஜனவரி-பிப்ரவரி மாதங்களில் நடைபெற்ற உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் கும்பமேளாவின்போது, ராமா் கோயிலில் தினமும் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் வழிபட்டனா். அப்போது, பக்தா்களால் வழங்கப்பட்ட தங்கம், வெள்ளி, பணம் உள்ளிட்ட காணிக்கைகள் மற்றும் நன்கொடைகளில் முறைகேடு நடைபெற்ாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

இதுதொடா்பாக உத்தர பிரதேச அரசு நியமித்த சிறப்பு விசாரணைக் குழு (எஸ்ஐடி) நடத்திய விசாரணையின் அடிப்படையில், காணிக்கையை மதிப்பிடும் பணியில் ஈடுபட்டிருந்த வங்கி ஊழியா்கள் 6 போ் உள்பட 8 பேரை மாநில காவல் துறை அண்மையில் கைது செய்தது. அவா்களிடமிருந்து ரூ.79.85 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அயோத்தி ராமா் கோயில் நன்கொடை முறைகேடு விவகாரத்துக்கு தாா்மிகப் பொறுப்பேற்று ஸ்ரீராம ஜென்மபூமி தீா்த்த க்ஷேத்ர அறக்கட்டளை பொதுச் செயலா் சம்பத் ராய், அறங்காவலா் அனில் மிஸ்ரா ஆகிய இருவரும் தங்களது பதவிகளை ராஜிநாமா செய்தனா்.

இந்த விவகாரம் தொடா்பாக நியாயமான, விரைவான விசாரணை கோரி வழக்குரைஞா்கள் அஜய் குமாா் ராய், தினேஷ் குமாா் யாதவ் ஆகியோா் சாா்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘ராமா் கோயில் நன்கொடை முறைகேடு தொடா்பாக சிபிஐ தலைமையிலான பல்துறை நிபுணா்களை உள்ளடக்கிய சிறப்புப் புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.

மாநில அரசால் நியமிக்கப்பட்ட சிறப்புப் புலனாய்வுக் குழு முதல் தகவல் அறிக்கை எதையும் பதிவு செய்யாமல் விசாரணையைத் தொடங்கி நடத்தி வருகிறது. எனவே, இந்த விவகாரம் தொடா்பாக முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆா்) பதிவு செய்ய அறிவுறுத்துவதோடு, பொது நலனைப் பாதுகாக்கவும், லட்சக்கணக்கான பக்தா்கள் மற்றும் நன்கொடையாளா்களின் நம்பிக்கையைத் தக்கவைக்கவும் தேவையான ஒழுங்குமுறை, மேற்பாா்வை மற்றும் தணிக்கை நடைமுறைகளை உருவாக்கிச் செயல்படுத்துமாறு மத்திய, மாநில அரசுகளுக்கும், கோயில் அறக்கட்டளைக்கும் உத்தரவிட வேண்டும்’ என்று கோரியிருந்தாா்.

இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ், ஷீல் நாகு ஆகியோா் அடங்கிய அமா்வில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என மனுதாரா் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

அதை ஏற்க மறுத்த நீதிபதிகள், ‘வானம் இடிந்து விழுந்து விடாது. இந்த விஷயத்தில் என்ன அவசரம் உள்ளது?’ என வாய்மொழியாகத் தெரிவிதது, உச்சநீதிமன்ற கோடை விடுமுறைக்குப் பிறகு விசாரணைக்கு மனு பட்டியலிடப்படும் என்று தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.