ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

அனுமதியின்றி உருது கற்பித்த ஹிந்தி ஆசிரியர்: தனியார் பள்ளி மீது வழக்குப்பதிவு!

தெலங்கானாவில் ஹிந்தி ஆசிரியர் மாணவர்களுக்கு அனுமதியின்றி உருது கற்பித்ததாக எழுந்த குற்றச்சாட்டில் தனியார் பள்ளி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது

கோப்புப் படம்

Published On :29 ஜூன் 2026, 4:48 pm IST

தெலங்கானாவில் ஹிந்தி ஆசிரியர் மாணவர்களுக்கு அனுமதியின்றி உருது கற்பித்ததாக தனியார் பள்ளி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

தெலங்கானா மாநிலத்தில் உள்ள நிசாமாபாத் நகரில் அமைந்துள்ள தனியார் பள்ளியில் ஹிந்தி ஆசிரியர் ஒருவர், அனுமதியின்றி மாணவர்களுக்கு உருது கற்பித்ததாக எழுந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து பள்ளி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஹிந்தி ஆசிரியர் உருது கற்பித்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் பாஜக மற்றும் சில ஹிந்து அமைப்புகள் பள்ளி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போராட்டம் நடத்தினர். இதனைத் தொடர்ந்து, பள்ளியின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

அதேபோல, பள்ளியின் உள்ளே அனுமதியின்றி நுழைந்து தாக்குதல் நடத்தியதாக பள்ளி நிர்வாகம் அளித்த புகாரின் பேரில் ஹிந்து அமைப்பினர் மீதும் வழக்குப் பதியப்பட்டுள்ளது. இதில், போராட்டக்காரர்கள் பள்ளி நிர்வாகிகளிடம் வாக்குவாதம் செய்து அவர்களைத் தாக்கிய காணொலி இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் பள்ளியைப் பார்வையிட்ட வட்டாட்சியர் சத்யநாராயணன், சம்பந்தப்பட்ட பள்ளியில் அரசு அனுமதியின்றி மாணவர்களுக்கு உருது கற்பிப்பதாகவும், இஸ்லாமிய வழிபாட்டு முறைகள் சொல்லித் தரப்படுவதாகவும் குற்றச்சாட்டு வைத்தார். இதனைத் தொடர்ந்து, பள்ளியின் தாளாளர், பள்ளி முதல்வர், ஆசிரியர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.

பள்ளியில் எடுக்கப்பட்ட ஒரு காணொலியில் தொடக்கப் பள்ளி மாணவர்கள் தங்களுக்கு உருது கற்பிக்கப்படுவதாகக் கூறியிருந்தனர். இதுபற்றி, பள்ளிக் கல்வித்துறை சார்பில் விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.

ஆர்மூரில் உள்ள இந்தப் பள்ளி வளாகத்தில் பவிஷ்ய தர்சினி மற்றும் பாரத் சந்திரா ஆகிய இரண்டு பள்ளிகள் இயங்குகின்றன. 1 முதல் 7 ஆம் வகுப்பு வரை பவிஷ்ய தர்சினி பள்ளியிலும், 8 முதல் 10 ஆம் வகுப்பு வரை பாரத் சந்திரா பள்ளியிலும் வகுப்புகள் நடைபெறுகின்றன.

Summary

Hindi teacher taught Urdu without permission: Case registered against private school!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.